இந்திய மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மொழிகள் (Languages of India) என்ற இக்கட்டுரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளைப் பற்றியதாகும். இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம் ஆகும். உலகில் அதிக மொழிகள் பேசும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின்படி, இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன.
பெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் ஆகியவற்றோடு வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன. இந்தி, மராத்தி, குசராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள், தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
இந்திய அரசின் அலுவல் மொழி இந்தியும் ஆங்கிலமும் ஆகும். மேலும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்தியையும் சேர்த்து 22 மொழிகள் ஏற்பளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு தகுந்தாற்போல் அலுவல் மொழிகள் மாறுபடும்.[1] அவை பின்வருமாறு:
- அசாமி -
- மைதிலி மொழி -
- வங்காளம் -
- குசராத்தி -
- இந்தி -
- தமிழ் -
- கொங்கணி மொழி -
- மலையாளம் -
- மணிப்புரி -
- மராத்தி -
- நேபாளி -
- ஒரியா மொழி -
- பஞ்சாபி -
- சமசுகிருதம் -
- சிந்தி -
- கன்னடம் -
- தெலுங்கு -
- போடோ மொழி -
- சந்தாளி மொழி -
- தோக்ரி மொழி -
- காசுமீரி
- உருது
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads