இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர்

From Wikipedia, the free encyclopedia

இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர்
Remove ads

இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர் (Principal Secretary to the Prime Minister of India (PS to the PM) இந்திய அரசின் மிக மூத்த இஆப அதிகாரியும், இந்தியப் பிரதமரின் தனிச் செயலாளரும், இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின் தலைவரும் ஆவார். இப்பதவிக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகளும், அதிகாரங்களும் உள்ளது. பொதுவாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நிகரான அதிகாரமுள்ள முதன்மைச் செயலாளராக இருப்பினும், பிரதமரின் முதன்மைச் செயலாளர் மட்டுமே இந்தியப் பிரதமருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரமுள்ளது.[1][2] 2019ம் ஆண்டு முதல் பிரதமரின் முதன்மைச் செயளாருக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் இந்திய அரசு இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர் भारत के प्रधान मंत्री के प्रधान सचिव, சுருக்கம் ...
Remove ads

அதிகாரங்கள்

இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர், இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுகிறார். இந்திய அரசின் அன்றாட விவகாரங்களை கண்காணிக்கிறார்.

  • உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் பிரதமருக்கு ஆலோசனை வழங்குதல்.[4]
  • பிரதமரால் ஒதுக்கப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் விவகாரங்களை மேற்பார்வை செய்தல்.[4]
  • பிரதம அமைச்சர் அலுவலகத்தில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.[4]
  • பிரதம மந்திரி அலுவலகத்தில் உத்தியோகபூர்வ, அரசாங்க, முக்கியமான ஆவணங்களைக் கையாளுதல்.[4]
  • மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் பிரதம மந்திரி விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த குறிப்புகளைத் தயாரித்தல்.[4]
  • ஒப்புதல் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய கோப்புகளை பிரதமரின் முன் வைப்பது.[4]

பிரதமரின் முதன்மைச் செயலாளர் பொதுவாக பிரதம அமைச்சரின் மிக முக்கியமான உதவியாளராகக் கருதப்படுகிறார்.[5][6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads