இந்தியாவில் இட ஒதுக்கீடு

சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி/வேலையில் இடங்களை ஒதுக்கும் சமூக நீதி திட்டம். From Wikipedia, the free encyclopedia

இந்தியாவில் இட ஒதுக்கீடு
Remove ads

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தில் அழுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பதவிகள் என பல்வேறு துறைகளில், இடங்களை அவர்களின் பாதிப்பு நிலை அல்லது பங்கு பெற்றுள்ள நிலை , மக்கள் தொகைக்கேற்ப ஒதுக்கி அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை பெறச் செய்து, காலப்போக்கில் சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். அப்படி அழுத்தப்பட்ட மக்கள் இனம், சாதி, சமூகநிலை, மொழி, பாலினம், வாழிடம், பொருளாதாரச் சூழல், மாற்றுத்திறன் போன்றவற்றில், எந்தக் காரணியால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பெண்கள் பல சமூகங்களில் படிப்பு, வெளி வேலை இல்லாமல் வீட்டு வேலையே செய்து வந்தனர். அவர்கள் பங்கினை உறுதி செய்ய வேலைவாய்ப்பு , அரசியல் பதவிகளில் குறிப்பிட்ட அளவு இடங்கள் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது.இந்தியாவில் பல சாதிகளுக்கு படிப்பு உரிமைகள், சொத்து உரிமை மறுக்கப்பட்டு, சமூகரீதியில் தாழ்நிலையில் அழுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட வகுப்பினருக்கு பாதிக்கப்பட்ட அளவுக்கேற்பவும், மக்கள் தொகைக்கேற்பவும், உரிமைகளும், வாய்ப்புகளும் கிடைக்க இட ஒதுக்கீடு பயன்படுகிறது. வெள்ளையின, கருப்பின ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இன அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினாலும் அதன் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு அல்ல. அனைத்து வகுப்பு மக்களையும் எந்தக் காரணத்தால் பாதிக்கப்பட்டார்களோ அதே காரணத்தைக் கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவதே இட ஒதுக்கீட்டின் முதன்மை நோக்கம் ஆகும். Thumb

Remove ads

பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு

  • கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் பட்டியல் சமூகத்தினர் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (SC & ST) முறையே 15 % மற்றும் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இவர்களுக்கு துணைப் பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மத்திய அரசில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் என்ற பெயர்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
Remove ads

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு (OBC) 27.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளில் BC,MBC,BC-A, BC-B, OBC-A, OBC-B, OBC எனப் பல்வேறு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனக் குறிப்பிடுகின்றனர்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8,00,000 ₹க்கு குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே OBC இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு-கிரீமிலேயர் அல்லாதவர் (OBC-Non Creamy layer) எனக் குறிப்பிடப்படுகின்றனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8,00,000 ₹க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது இவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு-கிரீமிலேயர் (OBC-Creamy layer) எனக் குறிப்பிடப்படுகின்றனர்.இந்த வருமான வரம்பானது அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

Remove ads

உயர் சாதி ஏழைகள்(FC-EWS)

இந்திய அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதிகளின் ஏழைகளுக்கு 10% சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் திருத்தம் செய்ய 124-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்ட மசோதா, சனவரி, 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.[1]பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் 14 சனவரி 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.[2]

இச்சட்டத் திருத்தத்தின் படி உயர் சாதி பிராமணர், ராஜபத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், ஜெயின், நகரத்தார் போன்ற வர்த்தகச் சமூத்தைச் சேர்ந்த ஏழைகள் பயனடைவர். உயர் சாதியினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் அல்லது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.[3][4]

பிற பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு பெறும் ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகள் அதாவது SC,ST,OBC பிரிவு ஏழைகள் இந்தப் பிரிவில் பயன்பெற இயலாது

மாநில அரசுகளில் இடஒதுக்கீடு

Remove ads

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% உள் இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் சாதியினருக்கு (SC) 15%, பட்டியல் சாதிகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA 3% உள் இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.[7]

Remove ads

மக்கள் பிரதிநிதிகளுக்கான இட ஒதுக்கீடு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு

பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும் இந்திய அரசியலில் பங்களிக்கும் விதமாக, இந்திய நாடாளுமன்றத்திற்கு 22 சதவீத தொகுதிகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு 84 தொகுதிகளும், பட்டியல் பழங்குடி மக்களுக்கு 47 தொகுதிகளும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[8]

மகளிருக்கு இட ஒதுக்கீடு

இந்திய நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டி 19 செப்டம்பர் 2023 அன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு அமர்வில் இந்திய அரசியலமைப்பின் நூற்று ஆறாவது திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.[9] நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க இந்தச் சட்டம் முயல்கிறது.[10]

Remove ads

இட ஒதுக்கீடும் பங்கு ஒதுக்கீடும் (Reservation and Quoto)

இட ஒதுக்கீடு (Reservation) என்பது அந்தந்த பிரிவினை சார்ந்த அனைவருக்கும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக இடங்களை ஒதுக்கி வைத்து வழங்கப்படுவதாகும். பங்கு ஒதுக்கீடு(Quoto) என்பது ஒரு பொதுவான வகையினருக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்குவதாகும். இதனை ஒரு உள் இடஒதுக்கீடு எனலாம். எடுத்துக்காட்டாக SC,ST, OBC-NCL, FC-EWS இட ஒதுக்கீட்டில் அந்தந்தப் பிரிவினை சார்ந்த அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். பெண்கள் பங்கு ஒதுக்கீட்டில் (Quoto) பெண்களுக்கு என்று தனியே பங்கு வழங்கப்படும்.

முன்னாள் படைவீரர்கள் (Ex-Servicemen') : முன்னாள் படைவீரர்களுக்கு இந்திய அரசு மற்றும் இந்திய அரசு சார்ந்த பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[11] [12][13][14]

மாற்றுத் திறனாளிகள்: தேவையான கல்வித்தகுதி உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[15][16]

Remove ads

இட ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளும், விளக்கங்களும்

இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் இட ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளையும் ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசியம் சார்ந்தவர்கள்- எல்லாத் தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது.

இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், இட ஒதுக்கீடு ஏற்கெனவே உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் ஆதிக்கம் செய்வதை தடுப்பதாலும், அளவுக்கு அதிகமான பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்துவதாலும் அதனை பல்வேறு காரணங்களைச் சொல்லி எதிர்க்கின்றனர்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads