ஜம்மு காஷ்மீரில் இட ஒதுக்கீடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் புதிய இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சூன் மற்றும் சூலை 2019-இல் ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2019 நிறைவேற்றப்பட்டது.[1]
மாநில அரசு பதவிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு மற்றும் சில ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கு தொழில்படிப்பு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழகவும் இந்த சட்டம் வகை செய்கிறது. இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவை அடங்கும்.
சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு மாநில அரசு பதவிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்திய-பாகிஸ்தான் இடையே அமைந்த உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களையும், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினரையும் ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) சட்டம், 2019 வரையறுக்கிறது. இந்த இடஒதுக்கீட்டின் எல்லைக்குள் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களையும் சேர்க்க இந்த இட ஒதுக்கீடுச் சட்டம் வகை செய்கிறது. மேலும், கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் வாழ்பவர் அடிப்படையில் இட ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட எந்தவொரு நபரும் குறைந்தது ஏழு ஆண்டுகள் அத்தகைய பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டம் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கும் இந்த நிபந்தனையை விரிவுபடுத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய அரசு அறிவித்தபடி, ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய் அல்லது வேறு தொகையைத் தாண்டிய எந்தவொரு நபரும் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்குள் சேர்க்கப்படமாட்டார் என்று சட்டம் கூறுகிறது. இருப்பினும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு இந்த வருமான விலக்கு பொருந்தாது. மேலும் இந்த விலக்கு சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கும் பொருந்தாது என இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் கூறுகிறது.[2]
ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மலைப்பிரதேசங்களில் வாழும் (Residents of Hill Area), கல்வி மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினரான பகாரி மொழி[3] பேசும் 9.6 இலட்சம் மக்கள் இந்த புதிய இட ஒதுக்கீடுச் சட்டத்தின் படி புதிதாக இட ஒதுக்கீடு 4% பெறுவர்[4]
Remove ads
கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு விவரம்
- பட்டியல் வகுப்பினர்களுக்கு (Scheduled Caste) - 8%
- பட்டியல் பழங்குடியினர்களுக்கு (Scheduled Tribe) - 10%
- பகுக்கப்பட்ட பிற சமூக சாதியினர் (Category Other social castes) - 4%
- கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் பன்னாட்டு எல்லைபுறத்தில் வாழ்பவர்கள் - 4%
- பின்தங்கிய பகுதிகளில் வாழ்பவர்கள் (Residents of Backward Area (RBA) - 10%
- மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் (Residents of Hill Area) - 10%
- பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் (Economic Weaker Section) - 10%
- முன்னாள் இராணுவம், துணை-இராணுவப் படைகள் / காவல் துறை - 6%
- மாற்றுத் திறானாளிகள் (Physical Disabilities) - 4%
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads