இந்திய சமயங்களில் விலங்குரிமை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து, சமணம், மற்றும் பௌத்தம் உள்ளிட்ட இந்தியச் சமயங்களில் விலங்குரிமை பற்றிய சிந்தனைகள் இச்சமயங்களின் அடிப்படைத் தத்துவமான அகிம்சைக் கோட்பாட்டிலிருந்து எழுகின்றன.[1][2]

மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஆன்மாவைக் கொண்டிருக்கின்றன என்று இந்து சமயம் கூறுகிறது. இதன்படி உணர்திற உயிரினங்கள் இறந்த பின்னர் மீண்டும் மனிதனாகவோ அல்லது வேறு விலங்காகவோ மறுபிறவி எடுக்க வல்லவை என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.[3] இந்த நம்பிக்கைகளின் விளைவாக இந்துக்கள் பலரும் சைவ உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். அகிம்சைக் கோட்பாட்டினைக் இந்து சமயத்தைக் காட்டிலும் கடுமையாக எடுத்துரைக்கும் சமணக் கோட்பாடு சைவ உணவுமுறையை முற்றிலும் கட்டாயமாக ஆக்குகிறது.[3] இந்து, சமண மதங்களைப் போலவே மகாயான பௌத்தமும் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்வதால் மஹாயான பௌத்தர்களும் சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.[4]
Remove ads
இந்து மதம்
அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் ஒரு பகுதி வாழ்வதாகவும் அதுவே ஆத்மா என்று அழைக்கப்படுவதாகவும் இந்து மதம் போதிக்கிறது.[5] இதன் காரணமாகவே விலங்குகள் புனிதமாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று இந்துக் கோட்பாடுகள் கற்பிக்கின்றன.[5]
இந்து மதத்தில் புலி, யானை, எலி என பலதரப்பட்ட விலங்குகளும் போற்றப்படுகின்றன. குறிப்பாக, பசு இறையின் உருவாகப் போற்றப்படுகிறது.[4]
அனைத்து உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டுமென்பது காந்தியடிகளின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். அவர் விலங்குப் பரிசோதனையையும் விலங்கு வன்கொடுமையையும் எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
Remove ads
சமண மதம்
கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ஜைன சமூகங்களும் காயமுற்ற விலங்குகளையும் ஆதரவற்ற விலங்குகளையும் பராமரிப்பதற்காக விலங்கு மருத்துவமனைகளை நிறுவியுள்ளன.[4] சமணர்கள் பலரும் வதைகூடங்களிலிருந்து விலங்குகளை மீட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[4]
பௌத்த மதம்
"நாம் மற்றவர்களுக்குத் துன்பங்களை தராதிருந்தால் மட்டுமே நாம் துன்பத்திலிருந்துத் தப்பிக்க முடியும்" என்று மஹாயான பௌத்தம் போதிக்கிறது. இதன் விளைவாக மகாயான பௌத்தர்கள் சைவ உணவுமுறையினைக் கடைபிடிப்பவர்களாக உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads