இந்திய தேசிய அறிவியல் கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy-INSA) என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய அறிவியலாளர்களுக்காக புது தில்லியில் அமைந்துள்ள தேசிய அவையாகும் ஆகும்.[1] பேராசிரியர் அசுதோசு சர்மா இந்த அவையின் தற்போதைய தலைவர் ஆவார் (2023-முதல்).
Remove ads
வரலாறு
இந்தியத் தேசிய அறிவியல் கழகம், புது தில்லி, அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமாகும். இந்தியாவின் கொல்கத்தாவில் 1935ஆம் ஆண்டு இந்தியத் தேசிய அறிவியல் நிறுவனம் (NISI) நிறுவப்பட்டதிலிருந்து இந்தியத் தேசிய அறிவியல் கழகம் தோன்றியதாக அறியப்படுகிறது. அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் நலன்களை மேம்படுத்துதல், அறிவியலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த அவை தொடங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் இது முதன்மையான தேசிய அறிவியல் சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அவையின் தலைமையகம் 1951-ல் தில்லியில் உள்ள இதன் தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[2] 1968ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் முடிவு காரணமாக அனைத்து பன்னாடு அறிவியல் மன்றங்களிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தினை கட்டாயமாக்கியது இந்திய அரசு. 1970-ல், இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் எனும் புதிய பெயருடன் செயல்படத் தொடங்கியது. 1951ஆம் ஆண்டு பகதூர் சா ஜாபர் பகுதியில் தொடங்கப்பட்ட இதன் வளாகம் 1980களின் பிற்பகுதியில் - 90களின் நடுப்பகுதியில் நன்கு விரிவுபடுத்தப்பட்டது. இன்று ஏழு தளங்களுடன் அழகான வடிவிலான பொன்விழாக் கட்டிடத்துடன் அறிவியல் சேவையினை ஆற்றிவருகின்றது. இந்த பொன்விழாக் கட்டடம் 1996-ல் கட்டி முடிக்கப்பட்டது.[3]
Remove ads
கண்ணோட்டம்
இந்திய தேசிய அறிவியல் கழகம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தேர்தல் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.[4] இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் நோக்கங்களாக இந்தியாவில் அறிவியலை மேம்படுத்துதல், தேசிய நலனுக்கான பயன்பாடு, அறிவியலாளர்களின் நலன்களை பாதுகாத்தல், ஒத்துழைப்பை வளர்த்தல், பன்னாட்டு அறிவியல் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய பிரச்சினைகளில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிப்பதிலும், அங்கீகரிப்பதிலும், வெகுமதி அளிப்பதிலும் இந்தியத் தேசிய அறிவியல் கழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 'அறிவியல் தொழில்நுட்ப' துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 4 பிரிவுகளில் 59 விருதுகளை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இவை:
- பன்னாடு விருதுகள்,
- பொது விருது & விரிவுரை விருதுகள்,
- துறைவாரியான பதக்கங்கள்/சொற்பொழிவுகள் மற்றும்
- இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள் .
இந்தியத் தேசிய அறிவியல் கழகம் 2004-ல் அறிவியல் மற்றும் மனித நேய அறிவியலுக்கான பெர்லின் பிரகடனம் கையெழுத்திட்டது.[5]
Remove ads
தலைவர்கள்
கழகத்தின் தலைவர்கள் பட்டியல்.[6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads