இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) (Hindi: भारतीय राष्ट्रीय राजमार्ग प्राधिकरण) இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாகும். இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை பராமரித்து வருகிறது.[3]
Remove ads
நிறுவல்
1988ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம்,1988 மூலம் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 1995இல் இந்த ஆணையம் தன்னாட்சிநிலை பெற்றது.[1]
திட்டப்பணிகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்தை (NHDP) படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ளது[3].
- கட்டம் I: திசம்பர் 2000இல் ₹300 பில்லியன் செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஏற்பளிப்பு.
- கட்டம் II: திசம்பர் 2003இல் ₹ 343 பில்லியன் திட்டச்செலவில் கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் மீத பகுதிகளும் மேலும் 486 km (302 mi) நெடுஞ்சாலைகளுக்கும் ஏற்பளிப்பு.
- கட்டம் IIIA: மார்ச்சு 2005இல் ₹ 222 பில்லியன் திட்டச்செலவில் 4,035 km (2,507 mi) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் IIIB: ஏப்ரல் 2006இல், ₹ 543 பில்லியன் திட்டச்செலவில் 8,074 km (5,017 mi) தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு.
- கட்டம் V: அக்டோபர் 2006இல், 5,700 km (3,500 mi) நீளம் தங்க நாற்கரச் சாலைகள் உட்பட, 6,500 km (4,000 mi), தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு தட வழிகளாக மேம்படுத்த ஏற்பளிப்பு. இது முற்றிலும் DBFO முறைமையில்.
- கட்டம் VI: நவம்பர் 2006இல் ₹ 167 பில்லியன் திட்டச்செலவில் 1,000 km (620 mi) தொலைவு விரைவுச்சாலைகளை உருவாக்கிட ஏற்பளிப்பு
- கட்டம் VII: திசம்பர் 2007இல், ₹ 167 பில்லியன் திட்டச்செலவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேர்ந்தெடுத்த தேசியச்சாலைகளில் வட்டச்சாலைகள், புறவழிச்சாலைக்ள, மேற்பாலங்கள் கட்டமைக்க ஏற்பளிப்பு
இந்தத் திட்டங்களின் நிகழ்நிலை மற்றும் முன்னேற்றத்தை ஆணையத்தின் வலைத்தளம் அவ்வப்போது இற்றைப்படுத்துகிறது.
வடகிழக்கு மண்டலத்திற்கான சிறப்பு விரைவுச்சாலை மேம்பாட்டுத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமே மேலாண்மை செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகர்களை ஒன்றுடன் ஒன்று இருவழி அல்லது நான்குவழிச் சாலைகளாக மேம்படுத்தப்படுகிறது.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads