இந்திய புள்ளிச் சருகுமான்

From Wikipedia, the free encyclopedia

இந்திய புள்ளிச் சருகுமான்
Remove ads

இந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica) என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் வசிக்கும் சருகுமான் குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பி விலங்காகும். இதன் உடலின் நீளம் கிட்டத்தட்ட 23 அங்குலம் (57.5 சமீ) உம் இதன் வாலின் நீளம் கிட்டத்தட்ட 1 அங்குலம் (2.5 சமீ) உம் ஆகும்; இதன் நிறை அண்ணளவாக 7 இறாத்தல் (3 கிகி) இருக்கும்.

விரைவான உண்மைகள் இந்திய புள்ளிச் சருகுமான், காப்பு நிலை ...

மழைக்காடுகளில் வாழும் இது இரவில் நடமாடக்கூடியதாகும். வெண் புள்ளிச் சருகுமான் (Tragulus meminna) இனத்தின் துணையினமொன்றாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த இது கூடுதல் ஆய்வுகளின் பின்னர் தனியினமாகக் குறிக்கப்பட்டது.[2]

Remove ads

விளக்கம்

இந்திய புள்ளிச் சருகுமான்கள் மெலிந்த கால்களும், சற்று உயரத் தூக்கபட்ட பின்புறமும், சிறிய உடலும் கொண்டவை. இவற்றின் உடலமைப்பால் முன் கால்கள் சற்று குட்டையாக உள்ளதுபோலத் தோன்றும்.

இவை காடுகளிலும், செடி கொடிகள் நிறைந்த மலைப் பகுதிகளிலும் காணப்படும். பாறை இடுக்குகளிலும், மரப் பொந்துகளிலும் மறைந்து வாழக்கூடியவை. பயந்த சூபாவம் உடைய இவை தங்கள் மறைவிடங்களில் இருந்து காலையிலும், அந்தியிலும் உணவிற்காக வெளியே வருபவை.

இவற்றின் உடலில் பழுப்பும், காவி நிறமும் சேர்ந்த நிறத்தில் உரோமங்கள் இருக்கும். விலாப் பகுதியில் வெள்ளை நிறத் திட்டுகள் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு நீண்ட கோடுகள் போலக் காணப்படுகின்றன. இந்த சருகு மான்களின் அடிவயிறு வெண்மையானவை. உடலில் ஆங்காங்கே மஞ்சள் நிறப்புள்ளிகள் உண்டு.

Remove ads

நடத்தையியல்

இந்திய சருகு மான்கள் கூட்டமான வாழ்வதில்லை. ஆண்மான்கள் இனைச்சேர்க்கை காலத்தில் மட்டும் பெண் மானை நாடி வரும். மலைக்காலம் முடிந்த பிறகு பெண்மான்கள் இரண்டு குட்டிகளை ஈனும்.[3]

மேற்கோள்கள்

வெளித் தொடுப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads