இந்திய வரலாற்றுப் பேராயம்

சட்டமுறை அமைப்புக்குழு From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய வரலாற்றுப் பேராயம் (Indian History Congress) என்பது மிகப்பெரிய இந்திய தொழில்முறை, கல்வியியில் வரலாற்றாசிரியர்களின் அமைப்பாகும். இதில் 35,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பானது 1935 இல் நிறுவப்பட்டது. [1] இந்த அமைப்பில் புதியதாக ஒருவர் உறுப்பினராக வேண்டுமானால் புதிய விண்ணப்பதாரரின் பெயரை, ஏற்கனவே உள்ள சாதாரண அல்லது ஆயுள் கால உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசிம். [2]

Remove ads

வரலாறு

பிரித்தானியர் ஆட்சியின் போது பூனா வரலாற்றாசிரியர்களால் அகில இந்திய தேசிய வரலாற்றாசிரியர்கள் பேராயம் நிறுவுவப்பட்டது. இதன் முதல் அமர்வு பூனாவில் உள்ள பாரத் இதிகாஸ் சன்சோதக் மண்டலில் 1935 இல் கூடியது. வரலாற்றாசிரியர்களான டத்தோ வாமன் போட்டார், சுரேந்திர நாத் சென் (பின்னர் இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் முதல் இயக்குநரானார்), சர் ஷஃபாத் அகமது கான் ஆகியோர் முதல் அமர்வில் கலந்து கொண்டனர். [3]

வரலாற்றாசிரியர்களான முகமது அபீப், சுசோபன் சர்க்கார், சையித் நூருல் அசன், ராம் சரண் சர்மா, ராதா கிருஷ்ண சவுத்ரி, சத்தீஷ் சந்திரா, பிபன் சந்திரா, ரூமிலா தாப்பர், அர. சம்பகலட்சுமி, இர்பன் அபீப், அதர் அலி, பருண் டே, இக்திதார் ஆலம் கான், பி. என். முகர்ஜி, கே. என். பணிக்கர், பிரஜாதுலால் சட்டோபாதயாய், திவிஜேந்திர நாராயண் ஜா, சுமித் சர்க்கார், சப்யசாச்சி பட்டாச்சார்யா, பிரீதம் சைனி [4] ஆகியோர் இந்திய இந்திய வரலாற்றுப் பேராயத்துடன் நீண்ட காலம் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். [5]

Remove ads

விருதுகள்

எச். கே. பர்புஜாரி விருது

விஸ்வநாத் காசிநாத் ராஜ்வாடே விருது (இந்திய வரலாற்றில் பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனை)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads