சுசோபன் சர்க்கார்

இந்திய வரலாற்றாசிரியர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுசோபன் சந்திர சர்க்கார் (Susobhan Chandra Sarkar, 1900-1982) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர்.

விரைவான உண்மைகள் சுசோபன் சந்திர சர்க்கார், பிறப்பு ...
Remove ads

பின்னணியும், கல்வியும்

சுரேஷ் சந்திர சர்காரின் மகனான சுசோபன் சந்திர சர்க்கார், டாக்காவின் பிரம்மோ குடும்பத்தில் பிறந்தார். இவர் டாக்கா கல்லூரிப் பள்ளியில் பயின்றார். கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் வரலாறு படித்தார். பின்னர் 1923 முதல் 1925 வரை ஆக்ஸ்போர்டில் உள்ள ஜீசஸ் கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றார். இவரது மகள்களான சிப்ரா சர்க்கார் கல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும், சுமித் சர்க்கார் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும் இருந்தனர்.

Remove ads

தொழில்

இந்தியா திரும்பிய இவர் தாக்க பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியில் இணைந்தார். பின்னர் 1927 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்று உயர்நிலை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். 1920 களில் விஸ்வபாரதி, சாந்திநிகேதனின் நிறுவனரான ரவீந்திரநாத் தாகூரின் மேற்பார்வையின் கீழ் அதன் நிர்வாகத்தில் ஈடுபட்டார். 1932 இல், கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் இருந்து தலைமுறை தலைமுறையாக மாணவர்களை ஊக்கப்படுத்திய கல்லூரியின் நீண்டகாலப் பேராசிரியராக இவர் நினைவுகூரப்படுகிறார்.[1]

இவர் 1956 இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1967 வரை தனது இறுதிப் பணிக்காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார்.

சர்க்காரின் பணிகளில் மார்க்சிய, கிராம்சியன் கருத்துக்கள் தாக்கம் செலுத்தியது. இவர் நவீன ஐரோப்பாவின் வரலாற்றைக் கற்பித்தார். குறிப்பாக பிரிட்டனில் அரசியலமைப்பு வரலாற்றின் வளர்ச்சி மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அரசியல் சிந்தனை ஆகியவற்றைக் கற்பித்தார். வங்காள மறுமலர்ச்சியைப் பற்றியும் 1930களில் இருந்து எழுதினார். வங்காள மறுமலர்ச்சி பற்றிய அவரது குறிப்புகள் தேசியவாத இந்திய வரலாற்றில் ஆர்வத்தைத் தூண்டின.[2] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் எழுதினார்.

Remove ads

மரபு

பச்சிம்பங்கா இதிகாஸ் சம்சாத், கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைக்கழகத்துடன் (முந்தைய பிரசிடென்சி கல்லூரி) இணைந்து 1994 ஆம் ஆண்டு முதல் சர்க்காரின் நினைவாக விரிவுரைத் தொடரை நடத்தி வருகிறது.[3]

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads