இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பு (Indian Hockey Federation) என்பது, பன்னாட்டு வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பின் இந்தியக் கிளையாக இயங்கிவந்த அமைப்பு ஆகும்.
பின்னணி
1928 ஆம் ஆண்டு குவாலியரில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இந்தியாவில் வளைதடிப் பந்தாட்ட விளையாட்டுக்கான உயர் ஆட்சிக் குழுவாக விளங்கியது. இதுவே பன்னாட்டு வளைதடிப்பந்தாட்ட அமைப்பில் இணைந்த முதலாவது ஐரோப்பா சாராத அமைப்பு ஆகும். தலைவர் கே.பி.எசு.கில், செயலர் கே சோதிகுமாரன் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் இவ்விளையாட்டுக்கான எல்லாப் பன்னாட்டுப் போட்டிகளிலும் இவ்வமைப்பு இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியது. பெண்களுக்கான வளைதடிப்பந்தாட்டக் குழு பெண்கள் வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பின்கீழ் இயங்கியது.
Remove ads
இடைநிறுத்தம்
எப்ரல் 2008ல், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அமைப்பின் செயலாளர் கையூட்டு வாங்கியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.[1] இதைத் தொடர்ந்து செயலாளர் கந்தசுவாமி சோதிகுமாரன் பதவியில் இருந்து விலகினார். அதே ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய வளைதடிப்பந்தாட்டக் கூட்டமைப்பை இடைநிறுத்தம் செய்தது.[2] இதனால் 14 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய கே.பி.எசு கில்லும் பதவியிழந்தார்.[3]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads