இந்திர ஜெயசிங்க வருமதேவன்
பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், நான்காம் அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திர ஜெயசிங்க வருமதேவன் (ஆங்கிலம்: Indrajayasingha Warmadewa; இந்தோனேசியம்: Jayasingha Warmadewa; என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியில், நான்காம் அரசர் ஆவார். இந்திரஜெயசிங்க வர்மதேவன் அல்லது ஜெயசிங்க வர்மதேவன் என்றும் அழைக்கப்படும் இவர் தவநேந்திர வருமதேவன் எனும் மூன்றாம் பாலி அரசரின் வாரிசு மன்னர் ஆவார்.
இந்த மன்னரை மனுகாயா கல்வெட்டு (Manukaya inscription) (882 சக ஆண்டு) எனும் கல்வெட்டிலிருந்து அடையாளம் காணலாம்.
பலத்த நீர் ஓட்டத்தால் ஆண்டுதோறும் சேதம் அடைந்து வந்த எம்பூல் தீர்த்தக் கோயிலை) (Tampaksiring); Tirtha Empul) மீட்டெடுக்க மன்னரின் உத்தரவு இந்தக் கல்வெட்டில், உள்ளது.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, இரண்டு ஏரிகளும் வலுவுடன் நீண்ட காலம் நீடித்தன என்று நம்பப்படுகிறது.
Remove ads
மனுகாயா கல்வெட்டு
தற்போது தம்பாக்சிரிங் அரசு அரண்மனைக்கு (Tampaksiring State Palace) அருகில் அமைந்துள்ள மனுக்ரயா கிராமத்தில் மன்னர் ஜெயசிங்க இரண்டு குளியலறைகளைக் கட்டியதாகவும் அந்தக் கல்வெட்டில் கூறப்படுகிறது.
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், மனுகாயா கல்வெட்டு தவநேந்திர வருமதேவன் மற்றும் அவரின் துணைவியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads