இந்தோனேசியாவின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசியாவின் வரலாறு, அதன் புவியியல் அமைவு, இயற்கை வளங்கள், தொடரான மக்கள் புலப்பெயர்வும் தொடர்புகளும், போர்களும் ஆக்கிரமிப்புக்களும், போன்றவற்றாலும்; வணிகம், பொருளாதாரம், அரசியல் என்பவற்றாலும் உருப்பெற்றது.
இந்தோனேசியா 17,000 தொடக்கம் 18,000 வரையான தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்ட நாடு. தென்கிழக்காசியப் பகுதியில் உள்ள இந்நாடு நடுநிலக் கோட்டின் வழியே நீண்டு காணப்படுகின்றது. இத்தீவுகளுள் 8,844 தீவுகளுக்குப் பெயர்கள் உண்டு, 922 தீவுகளில் மட்டுமே நிரந்தரக் குடியிருப்புக்கள் உள்ளன.
Remove ads
பொது
இந்தோனேசியா முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ளதால். தீவுகளுக்கு இடையிலான வணிகமும், பன்னாட்டு வணிகமும் வளர்ச்சியடைந்தன. இதனால் இந்தோனேசியாவின் வரலாற்றைத் தீர்மானிப்பதில் வணிகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. இந்தோனேசிய மக்கள் பல்வேறு புலப்பெயர்வுகளின் ஊடாக இப்பகுதியில் குடியேறியதால், இங்கே பல்வகைப்பட்ட பண்பாடுகளும், இனங்களும், மொழிகளும் காணப்படுகின்றன.
தீவுக்கூட்டத்தின் நில அமைப்பும், தட்பவெப்ப நிலைகளும், வேளாண்மை, வணிகம் போன்றவற்றிலும் நாடுகளின் உருவாக்கத்திலும் செல்வாக்குச் செலுத்தின. இந்தோனேசியாவின் எல்லைகள் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் 20 ஆம் நூற்றாண்டு எல்லைகளாகும்.
சாவா மனிதன்
"சாவா மனிதன்" எனப் பரவலாக அறியப்படும் ஓமோ இரக்டசுவின் புதைபடிவ எச்சங்களும், அவனால் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், இந்தோனேசியத் தீவுகளில் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக உள்ள ஆசுத்திரோனேசிய மக்கள் முதலில் தாய்வானில் இருந்து பொகாமு 2000 அளவில் இந்தோனேசியாவுக்கு வந்ததாக நம்பப்படுகின்றது.
பொகா 7-ஆம் நூற்றாண்டளவில், பலம் பொருந்திய சிறீவிசய இராச்சியம் செழிப்புற்றிருந்தது. இதனூடாக இந்து, பௌத்த செல்வாக்குகள் இந்தோனேசியாவுக்குள் வந்தன. வேளாண்மை சார்ந்த, பௌத்தர்களான சைலேந்திர வம்சமும், இந்துக்களான மத்தாராம் வம்சமும் ஜாவாவின் உட்பகுதிகளில் செழித்திருந்து பின்னர் வீழ்ச்சியடைந்தன. முசுலிம் அல்லாத குறிப்பிடத்தக்க கடைசி இராச்சியம், 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த இந்து மசாபாகித் இராச்சியம் ஆகும்.
இசுலாம் மதம்
இதன் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும் பகுதியில் பரவி இருந்தது. சான்றுகளின்படி மிக முந்திய இசுலாமுக்கு மாறிய மக்கள் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்ததாகத் தெரிகிறது. இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் வாழ்ந்தோரும் படிப்படியாக இசுலாமுக்கு மாறினர். இதனால், 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சவாவிலும் சுமாத்திராவிலும் இசுலாம் முதன்மை மதமாக மாறிவிட்டது. இங்கே இசுலாம் ஏற்கெனவே இருந்த பண்பாடு, மதம் ஆகியவற்றுடன் கலந்தே நிலவியது.
போர்த்துக்கேயர் 16-ஆம் நூற்ராண்டில் இந்தோனேசியாவுக்கு வந்தனர். மலுக்குவில் கிடைத்த பெறுமதியான வணிகப் பொருட்களான சாதிக்காய், கராம்பு, வால் மிளகு போன்றவற்றில் தனியுரிமையை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. 1602 இல் ஒல்லாந்தர், ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவினர். 1610 அளவில், அவர்கள் தென்கிழக்காசியப் பகுதியில் முதன்மை வல்லரசாக மாறினர்.
இரண்டாம் உலகப் போர்
ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனி நொடித்துப்போய் 1800 இல் கலைக்கப்பட்ட பின்னர், அதன் ஆட்சிப் பகுதிகள் நெதர்லாந்து அரசாங்கத்தில் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இப்பகுதியில் ஒல்லாந்தரின் ஆதிக்கம் தற்கால எல்லைகள் வரை விரிவடைந்தன. இரண்டாம் உலகப் போரின் 1942 - 1945 காலப்பகுதியில், சப்பான் இப்பகுதிகள் மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றிக்கொண்டதுடன், ஒல்லாந்தர் ஆட்சி முடிந்தது.
இது முன்னர் அடக்கப்பட்டிருந்த இந்தோனேசிய விடுதலை இயக்கத்தை ஊக்குவித்தது. 1945 ஆகத்தில் போரில் தோல்வியுற்ற சப்பான் சரணடைந்த இரண்டு நாட்களின் பின்னர், தேசியவாத தலைவரான சுகர்னோ நாட்டின் விடுதலையை அறிவித்து அதன் சனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். ஒல்லாந்தர் தமது ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்தனர். இதனால் ஆயுதப் போராட்டம் வெடித்ததுடன் இராசதந்திரப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. முடிவில், டிசம்பர் 1949 இல் நெதர்லாந்து முறைப்படி இந்தோனேசிய விடுதலையை ஏற்றுக்கொண்டது.
Remove ads
வரலாற்றுக்கு முந்திய காலம்
சாவா மனிதனின் புதைபடிவ எச்சங்கள் முதன் முதலாக ஒல்லாந்த உடற்கூற்று ஆய்வாளர் ஒருவரால், 1891 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 700,000 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்லப்பட்ட இவ்வெச்சங்களே உலகில் கண்டு பிடிக்கப்பட்ட மனித மூதாதையின் மிகப்பழைய எச்சமாக இருந்தது. தொடர்ந்து இதே வயதையுடைய ஓமோ இரக்டசு புதை படிவங்கள் 1930களில் சங்கிரானில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதர காலப் பகுதியில் இங்கான்டோங் என்னும் இடத்தில் மேம்பட்ட கருவிகளுடன் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2011 இல் இதன் காலம் 550,000 தொடக்கம் 143,000 வரை எனக் கணிக்கப்பட்டது.[1][2][3][4] 1977 இல் இன்னொரு ஓமோ இரக்டசு மண்டையோட்டை சாம்புங்மாசனில் கண்டுபிடித்தனர்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads