போத்துக்கீசர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
போத்துக்கீசர் (இலங்கை வழக்கு: போர்த்துக்கேயர்) என்னும் சொல் போர்த்துக்கல் நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்களையும் போத்துக்கீச மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களையும் குறிக்கும். இவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர்.
போத்துக்கீசர் தெற்கு ஐரோப்பிய மக்களாவர். இவர்கள் ரோமருக்கு முற்பட்ட கெல்ட்டிக் மற்றும் ஐபீரிய இனக்குழுக்களின் கலப்பினால் உருவானவர்கள். உரோம பண்பாட்டின் செல்வாக்கு பெருமளவுக்கு போத்துக்கீசப் பண்பாட்டில் காணப்படுகின்றது. இதுதவிர, கிரேக்கர், போனீசியர், கார்த்தஜீனியர் போன்றோரின் செல்வாக்கும் சிறிய அளவில் இவர்களிடம் காணப்படுகின்றது. போத்துக்கீச மொழி இலத்தீனிலிருந்து உருவானது.
இவர்கள் மத்தியில் கறுப்பு நிற முடியும், பழுப்பு நிறக் கண்களுமே பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆனாலும், பொன்னிற முடியும், நீல/பச்சைக் கண்கள் உடையவர்களும் உள்ளார்கள்.
போர்த்துக்கல் நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடி போத்துக்கீசர் உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டிலும் நடைபெற்ற பெரும் புலப்பெயர்வுகள் காரணமாக, சுமார் 3.5 கோடி பிரேசிலியர் போத்துக்கீசப் பின்புலத்தை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி உலகளாவிய அளவில், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றுக்கு ஏற்பட்ட போத்துக்கீசப் புலப்பெயர்வினால், இன்று உலகம் முழுவதிலும் 10 கோடிக்கு மேற்பட்ட போத்துக்கீச இரத்தத் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்படுகின்றது. போத்துக்கீசரின் வழி வந்தவர்கள் இன்றும், இந்த நாடுகளில் சிறுபான்மையினராகக் காணப்படுகின்றார்கள்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads