இந்தோனேசிய அரசியல்

இந்தோனேசியாவின் அரசியல் அமைப்பு From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய அரசியல்
Remove ads

இந்தோனேசிய அரசியல் (ஆங்கிலம்: Politics of Indonesia; இந்தோனேசியம்: Politik Indonesia) என்பது இந்தோனேசிய மக்களாட்சிக் கட்டமைப்பில் (Representative Democracy), குடியரசுத் தலைவரின் கீழ் நடைபெறும் அரசு முறைமை (Presidential System)ஆகும்.

Thumb
தேசிய சின்னம்

இதில் மக்களவைத் தலைவர் மற்றும் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கட்சி அமைப்புகள் இடம் பெறுகின்றன. இதன் நிர்வாக அதிகாரம் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.

அரசாங்கம்; இரு அவைகள் (Bicameral); இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவை (People's Consultative Assembly) ஆகிய அமைப்புக்களிடம் சட்டமியற்றும் அதிகாரம் (Legislative Power) உள்ளது. இதில் நீதித்துறையானது தன்னிச்சையாக (Judicial Independence) இயங்குகிறது.[1]

Remove ads

பொது

1945 அரசியலமைப்பு, நிர்வாகத்துறை; சட்டவாக்க அவைத் துறை மற்றும் நீதித்துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கி உள்ளது. அரசாங்க அமைப்பு என்பது "நாடாளுமன்ற பண்புகளுடன் கூடிய அதிபராட்சி" என விவரிக்கப்படுகிறது.[2]

இந்தோனேசியா, அதன் விடுதலைக்குப் பிறகு, சில ஆண்டுகள் மக்களாட்சி அரசாங்கமாக இருந்தது. சுகார்னோ ஆட்சியின் கீழ், 1957-இல் சர்வாதிகாரமானது. பின்னர், மே 1998 இந்தோனேசிய கலவரங்கள்; மற்றும் அதிபர் சுகார்த்தோ பதவி துறப்பு செய்யும் வரையில், இந்தோனேசியா என்பது சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் பின்னர், அதாவது அவர்கள் இருவரின் சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர், இந்தோனேசியாவில் மக்களாட்சி மீட்கப்பட்டது.

இந்தோனேசிய அரசியல் கட்சிகள்

பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) இந்தோனேசியாவை 2019-இல் ஒரு குறைபாடுள்ள மக்களாட்சி என்று மதிப்பிட்டுள்ளது.[3] இந்தோனேசிய அரசியல் கட்சிகள் அவற்றுக்கு இடையே அதிகாரத்தைப் பரவலாகப் பகிர்ந்து கொண்டு, வாக்காளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கடமைகளைச் செய்யும் கட்சிகளாகச் செயல்படுகின்றன என வகைப்படுத்தப்பட்டுள்ளன.[4][5][6]

ஒருங்கிணைந்த அல்லது அதிகபட்ச மக்களாட்சிகான தேவைகளை நிறைவு செய்வதில், இந்தோனேசியா தவறிவிட்டது என்றும்; நீதிமன்ற அமைப்பில் அடிக்கடி ஊழல் நிகழ்வுகள் நிகழ்கின்றன எனும் குறைபாடுகளும் நிலவி வருகின்றன.[7]

Remove ads

மேற்கோள்கள்

சான்றுகள்

மேலும் காண்க

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads