இந்தோனேசிய தேசிய சின்னம்

From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய தேசிய சின்னம்
Remove ads

பஞ்ச சீலம் (ஆங்கிலம்: Pancasila; இந்தோனேசியம்: Garuda Pancasila) என்பது இந்தோனேசியாவின் தேசிய சின்னம் ஆகும். இந்தோனேசிய மொழியில் கருட பஞ்சசீலா என்று பரவலாக அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் இந்தோனேசிய தேசிய சின்னம் National Emblem of Indonesia Garuda Pancasila, விவரங்கள் ...

சின்னத்தின் முதனமைப் பகுதி கருடன் மார்பில் ஒரு கட்டியம் சார்ந்த கவசம்; மற்றும் அதன் கால்களால் பிடிக்கப்பட்ட ஒரு சுருளைக் கொண்டுள்ளது. கேடயத்தின் ஐந்து சின்னங்கள் பஞ்ச சீலம் எனும் இந்தோனேசியாவின் தேசிய சித்தாந்தத்தின் ஐந்து கோட்பாடுகளைக் குறிக்கின்றன.[1]

இந்தோனேசியாவின் தேசிய சின்னச் சின்னத்தில், கருடனின் நகங்கள் பின்னேகா துங்கல் இக்கா (Bhinneka Tunggal Ika) எனும் இந்தோனேசிய தேசிய பொன்மொழி பொறிக்கப்பட்ட வெள்ளை நிறச் சுருளைப் பிடித்திருக்கிறது. கருப்பு உரையில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை "வேற்றுமையில் ஒற்றுமை" என்று மொழிபெயர்க்கலாம்.

Remove ads

பொது

Thumb
1035-ஆம் ஆண்டு ஏர்லாங்கா மன்னர் சிலையில் கருடனின் மீது ஏர்லங்கா மன்னன்
Thumb
1957-ஆம் ஆண்டு இந்தோனேசிய 5 ரூப்பியா பணத்தாளில் பிரம்பானான் ஆலயம்
Thumb
1950 பிப்ரவரி 11 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கருட பஞ்சசீல சின்னம்
Thumb
திருமூர்த்தி ஆலய வளாகத்தில் இருந்து பிரம்பானான் கோயில்

கருட பஞ்சசீலா சின்னம், மேற்கு கலிமந்தான், பொந்தியானாக் நகரைச் சேர்ந்த சுல்தான் அமீத் II என்பவரால், முன்னாள் அதிபர் சுகார்னோவின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டது. மேலும் 11 பிப்ரவரி 1950 அன்று, அந்தச் சின்னம் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Remove ads

வரலாறு

கருடன் என்பது இந்துக் கடவுளரான விஷ்ணுவின் சீடர் அல்லது வாகனம், இந்தோனேசியாவின் பல பண்டைய இந்து-பௌத்த கோயில்களில் காணப்படுகின்றன. மத்திய ஜாவா மெண்டுத்துக் கோயில், போரோபுதூர் ஆலய வளாகம், மத்திய ஜாவா சோச்சிவான் கோயில்[2], பிரம்பானான் கோயில், கிடால் கோயில், பெனத்தாரான் கோவில், பெலாகான் கோயில், சுகு கோயில் (Candi Sukuh) போன்ற கோயில்கள் கருடனின் உருவங்களைச் சிலைகளாகச் சித்தரிக்கின்றன.

பிரம்பானான் கோயில் வளாகத்தில் (Prambanan Temple Complex), விஷ்ணு கோயிலுக்கு எதிரே கருடனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது. ஆனால், தற்போது கோயில் அறைக்குள் கருடன் சிலை இல்லை.[3]

பிரம்பானான் கோயில் வளாகம்

பிரம்பானான் கோயில் வளாகத்தில், உள்ள சிவன் கோயிலில், பறவைக் கடவுள் இனத்தைச் சேர்ந்த கருடனின் மருமகன் ஜடாயு, இராவணனிடம் இருந்து சீதையை மீட்க முயன்றதைப் பற்றி இராமாயணத்தின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கப்படுகிறது.

1035-ஆம் ஆண்டு, கிழக்கு ஜாவா பெலாகான் எனும் இடத்தில் கட்டப்பட்ட பெலாகான் கோயிலில் (Belahan Temple) ஏர்லாங்கா மன்னரின் (King Sri Lokeswara Dharmawangsa Airlangga) சிலையில் கருடனின் சின்னம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. விஷ்ணுவை ஏற்றிச் செல்லும் காட்சியில் விஷ்ணுவாக ஏர்லாங்கா சித்தரிக்கப்பட்டுள்ளார்.[4]:129–130

ரோவுலன் அருங்காட்சியகம்

ஏர்லாங்கா மன்னரின் சிலையில் உள்ள கருடனின் சின்னம், பண்டைய ஜாவாவின் மிகவும் பிரபலமான கருடனின் சிலையாக இருக்கலாம். தற்போது இந்தச் சிலை டரோவுலன் அருங்காட்சியகத்தின் (Trowulan Museum) முக்கியமான சேகரிப்புகளில் ஒன்றாக உள்ளது.

பல மரபுகள் மற்றும் பல கதைகளில், குறிப்பாக சாவகம் (தீவு); பாலியில் உருவான கதைகளில்; கருடன் என்பது அறிவு, சக்தி, வீரம், விசுவாசம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் நல்லொழுக்கங்களைக் குறிக்கும் பொருளாகக் கருதப்படுகிறது. கருடன், விஷ்ணுவின் வாகனமாக, விஷ்ணுவின் பண்புகளைக் கொண்டுள்ளது. அது அண்ட ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் அறியப்படுகிறது.

பாலினிய பாரம்பரிய பண்பாடு

பாலினிய பாரம்பரியம், கருடனை "பறக்கும் அனைத்து உயிரினங்களின் தலைவன்" என்றும் "பறவைகளின் கம்பீரமான அரசன்" என்றும் போற்றுகிறது. தலை, கொக்கு, இறக்கைகள் மற்றும் நகங்களைக் கொண்ட கருடன், தெய்வீக உயிரினமாக பாலியில் பாரம்பரியமாகச் சித்தரிக்கப்படுகிறது. அதே வேளையில், பாலினிய கருடனின் சித்தரிப்பில் ஒரு மனிதனின் உடலும் உள்ளது.

பொதுவாக விஷ்ணுவின் வாகனமாக அல்லது நாகா எனும் டிராகன் பாம்புகளுக்கு எதிரான போர்க் காட்சிகளில், தங்க வண்ணம் மற்றும் தெளிவான வண்ணங்களைக் கொண்ட நுட்பமான செதுக்கல்களில் கருடன் சித்தரிக்கப்படுகிறது.

கருடா வானூர்திச் சேவை

பழங்காலத்தில் இருந்தே, இந்தோனேசிய பாரம்பரியத்தில், கருடனின் உன்னதமான நிலைப்பாடு உயர்வான நிலையில் உள்ளது. இந்தோனேசியச் சித்தாந்தத்தின் உருவகமான பஞ்ச சீலத்திலும்; இந்தோனேசியாவின் தேசிய அடையாளமாகப் போற்றப்படுகிறது.

இந்தோனேசிய தேசிய வானூர்தி நிறுவனமான கருடா இந்தோனேசியாவிற்கும் (Garuda Indonesia) கருடனின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[5][6]

Remove ads

இந்தோனேசிய தேசியச் சின்னக் குழு

Thumb
ஜகார்த்தா இந்தோனேசிய தேசிய நினைவுச் சின்னத்தின் விடுதலை அறையில் கருட பஞ்சசீலா சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசிய தேசியப் புரட்சி முடிவடைந்து, 1949-இல் இந்தோனேசிய விடுதலையை நெதர்லாந்து ஏற்றுக்கொண்ட பிறகு, இந்தோனேசியாவிற்கு தேசியச் சின்னம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சனவரி 10, 1950 அன்று இந்தோனேசிய தேசியச் சின்னக் குழு உருவாக்கப்பட்டது.[7][8]

இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்களின் தேசிய சின்னத்தை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முன்மொழிவுகளைத் தேர்வு செய்வதே அந்தக் குழுவின் பணியாகும்.

இந்தோனேசிய அமைச்சரவை ஒரு தேசியச் சின்ன வடிவமைப்பு போட்டியை நடத்தியது. இரண்டு வடிவமைப்புகள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு வடிவமைப்பு சுல்தான் அமீது II என்பவருடையது; மற்றொன்று முகம்மது யாமின் என்பவருடையது.

சுல்தான் அமீத் II என்பவரின் வடிவமைப்பு இந்தோனேசிய மக்களின் கலந்தாய்வுப் பேரவையாலும் (DPR) மற்றும் அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காட்சியகம்

வடிவமைப்பு போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஓவிய வடிவங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads