இந்தோனேசிய இந்தியர்கள்

From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய இந்தியர்கள்
Remove ads

இந்தோனேசிய இந்தியர்கள் (ஆங்கிலம்: Indian Indonesians; இந்தோனேசியம்: Orang India Indonesia) என்பவர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் ஒரு குழுவினர் ஆவார்கள்; மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். இந்தோனேசிய இந்தியர்கள் மட்டுமல்லாது; இந்தோனேசியாவில் வாழும் பாக்கிஸ்தானியர்களும் இந்தோனேசிய இந்தியர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர்.[1]

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

சனவரி 2012 இந்திய வெளியுறவு அமைச்சின் கணக்கின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட 120,000 இந்தியர்களில்; இந்தோனேசியாவில் மட்டும் 9,000 இந்தியர்கள் உள்ளனர்.[2] அவர்களில் பெரும்பான்மையினர் வடக்கு சுமத்ரா மற்றும் பண்டா அச்சே, சுராபாயா , மேடான் மற்றும் ஜகார்த்தா போன்ற நகரங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.[3]

இருப்பினும், இந்தோனேசிய இந்திய மக்களின் சரியான புள்ளிவிவரங்களைப் பெற இயலவில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளூர் இந்தோனேசியர்களிடமிருந்து பிரித்து அறிய முடியாதவர்களாக மாறியுள்ளனர்.[4]

Remove ads

பொது

Thumb
இந்தோனேசியா, ஜகார்த்தாவின் பசார் பாருவில் உள்ள ஒரு பழைய இந்தியப் பகுதி
Thumb
1920-களில் சுமாத்திராவில் இருந்த ஓர் இந்திய குடும்பத்தின் உருவப்படம்

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பல்வேறு மக்கள் வரலாற்று காலத்திற்குப் பின்னர் இந்தோனேசிய தீவுப் பகுதிக்கு அடிக்கடி சென்றனர். உதாரணமாக பாலி நகரில் முதலாம் நூற்றாண்டுகளின் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உண்மையில், இந்தோனேசியா என்ற பெயர் இலத்தீன் சிந்து (இந்தியா) மற்றும் கிரேக்க நெசோஸ் (தீவு) என்பதிலிருந்து வருகிறது. இது இந்திய தீவுப்பகுதி என்று பொருள்படும்.

Remove ads

வரலாறு

4--ஆம் மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து, இந்திய கலாசார தாக்கங்கள் இங்கு இன்னும் அதிகமாக காணப்பட்டன. பரம்பரிய தமிழ் மொழி அங்குள்ள கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், இந்திய மொழிகளில், உள்ளூர் மொழிகளே அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே பிரகிருதம் மற்றும் தமிழ் மொழியிலிருந்த பல சொற்களைக் கொண்டிருந்தது. அதோடு மட்டுமல்லாமல், சுதேச இந்தோனேசியர்கள் இந்து சமயத்தையும் புத்த மதத்தையும் தழுவினர் .

பல இந்திய மக்கள் இந்தோனேசியாவில் குடியேறி உள்ளூர் மக்களுடன் இணைந்து இயங்கினர். 9 ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவின் கிடைத்த ஒரு ஒரு கல்வெட்டில், பல்வேறு இந்திய மக்களின் (மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள்) பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர், இஸ்லாமியம் எழுச்சி கொண்டு, இந்த மதம் 11 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

Remove ads

மேடான் ஸ்ரீ மாரியம்மன் கோயில்

Thumb
வடக்கு சுமாத்திரா, மேடான், மாரியம்மன் கோயில்

மேடான் , வடக்கு சுமாத்திரா போன்ற இடங்களில் இன்றும் இந்தியாவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர். 75,000 மக்களைக் கொண்ட, ஒரு பெரிய (தமிழ் மக்கள்) சமூகம் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்தோனேசியாவில், பல்வேறு வட இந்தியர்களும் காணப் படுகின்றனர். பொதுவாக அவர்களின் தொழில்கள் ஜவுளி தொழில்களுடன் இணைந்துள்ளன. இந்தோனேசிய சீனர்களைப் போலவே இந்தோனேசிய இந்தியர்கள் பலர், கடை உரிமையாளர்களாக உள்ளனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லாத போதிலும், கிட்டத்தட்ட 25,000 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க இந்தோனேசிய இந்தியர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் தமிழ், ஆங்கிலம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads