இந்தோனேசிய சீனர்கள்
இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் இனக் குழுவினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசிய சீனர்கள் (ஆங்கிலம்: Chinese Indonesians; இந்தோனேசியம்: Orang Tionghoa Indonesia) என்பவர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் ஓர் இனக் குழுவினர் ஆவார்கள். இவர்களின் முன்னோர்கள் முதலில் சீனாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் இந்தோனேசிய சீனர்கள் என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் தியோங்குவா மக்கள் Tionghoa என அழைக்கப்படுவதும் உண்டு.[3]
தாய்லாந்து, மலேசியா மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு, உலகில் நான்காவது பெரிய வெளிநாட்டுச் சீனச் சமூகமாக இந்தோனேசிய சீனர்கள் உள்ளனர்.
இந்தோனேசிய சீன மக்களும் அவர்களின் இந்தோனேசிய சந்ததியினரும்; குறைந்தது 13-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் பலர், வயதான காலத்தில் வீடு திரும்பும் நோக்கத்துடன் தற்காலிகக் குடியிருப்பாளர்களாக வந்தனர்.[4]
இருப்பினும், அவர்களில் சிலர் பொருளாதார அடிப்படையில் இப்பகுதியில் நிரந்தரமாகத் தங்கி விட்டனர். தெற்கு சீனாவில் அவர்களின் சொந்த மாநிலங்களிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்ட குடியேற்றவிய காலத்தில், சீனர்களின் மக்கள் தொகையும் வேகமாக வளர்ச்சி பெற்றது.
Remove ads
பொது

இடச்சு காலனித்துவம் தொடங்கியதிலிருந்து இந்தோனேசிய சீனர்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடங்கின. அந்தப் பாகுபாடுகளைச் சரிசெய்ய, 1998-ஆம் ஆண்டு முதல் அரசாங்கக் கொள்கைகள் வழியாக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
வரலாறு
1950-களில், இந்தோனேசிய பூர்வீக வணிகர்கள், சீனர்களுடன் போட்டித் தன்மையுடன் செயல்பட முடியாது என்று உணர்ந்தார்கள். அதனால் இந்தோனேசிய சீனர்கள் மீதான வெறுப்பும் அதிகரிக்கத் தொடங்கியது.
பனிப்போரின் போது அமெரிக்காவின் ஆதரவுடன், சுகார்த்தோ அரசாங்கத்தின் கீழ், "பொதுவுடைமை எதிர்ப்பு" என்ற பெயரில் சீன இனத்தவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட படுகொலைகள் நடந்தன. பின்னர், சீன இனத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான குழுமங்கள் ஊழல் நிறைந்தவை என்ற கருத்தை அரசாங்கமும் பரப்பியது.
1997-ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடி இந்தோனேசியாவில் சீன வணிக நடவடிக்கைகளை கடுமையாக சீர்குலைத்தது. இருப்பினும், அரசாங்கக் கொள்கை மற்றும் அரசாங்கச் சட்டச் சீர்திருத்தங்கள்; இந்தோனேசிய சீனர்கள் மீதான பெரும்பாலான அரசியல், சமூகக் கட்டுப்பாடுகளை நீக்கியது.
அமைப்பு



உள்ளூர் சீனர் சமூகம் மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சி என்பது மூன்று கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. அவை: குல சங்கங்கள், இன ஊடகங்கள் மற்றும் சீன மொழி பள்ளிகள்.[5]
அந்தக் கூறுகள், சீனாவின் சிங் அரசமரபின் சீன தேசியவாதக் காலத்திலும், இரண்டாம் சீன-சப்பானியப் போர் காலத்திலும் செழித்தோங்கின. இருப்பினும், தேசியவாத உணர்வுகளின் நோக்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் சீன மக்களிடையே பிளவை ஏற்படுத்தின.
ஒரு குழுவினர் சீனாவில் அரசியல் சீர்திருத்தங்களை ஆதரித்தனர். மற்ற குழுவினர் உள்ளூர் அரசியலில் மேம்பட்ட தகுதியைப் பெறுவதற்காக பாடுபட்டனர். அந்தத் தாக்கங்கள்தான் இந்தோனேசியாவிலும் பிரதிபலித்தன.[6]
Remove ads
இன்றைய நிலை
ஜாவாவின் சீன மக்கள் தொகை, இந்தோனேசியாவின் மொத்த சீன மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. இந்தோனேசிய சீனர்கள் பொதுவாக இந்தோனேசியாவின் பழங்குடி மக்களை விட நகரமயமாக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆனாலும் குறிப்பிடத்தக்க கிராமப்புற வேளாண் துறைச் சமூகங்கள் இன்னும் நாடு முழுவதும் பரவலாக உள்ளன.
தற்போது இந்தோனேசிய சீனர்கள் இடையே கருவுறுதல் விழுக்காடு குறைந்து வருகிறது. இருப்பினும் அதுவே மக்கள்தொகை அமைப்பில் மேல்நோக்கிய மாற்றத்திற்கும் வழிவகுத்துள்ளன.
அந்த வகையில் சராசரி வயதும் அதிகரித்து வருகிறது. இந்தோனேசிய சீனர்களின் மக்கள் தொகை குறைவதற்கு, அவர்களில் சிலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகக் குடியேறுவதும் ஒரு காரணமாக உள்ளது.
சீன மக்கள் குடியரசிற்கு திரும்பிச் செல்லும் திட்டங்களில் இந்தோனேசிய சீனர்கள் சிலர் பங்கேற்றுள்ளனர்; மேலும் சிலர் சீன எதிர்ப்பு உணர்வுகளில் இருந்து தப்பிக்க அண்டை நாடுகளான சிங்கப்பூர், தைவான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.[7]
அவ்வாறு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தர்கள்; பெரும்பாலும் இந்தோனேசிய சீனர்கள் எனும் அடையாளத்துடன் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
காட்சியகம்
- இந்தோனேசிய சீனர் காட்சிப் படங்கள்
- 1910
- 2020
- 2015
- 2021
- 1887
- 2020
- 2019
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads