இந்தோனேசிய பிரதமர்
இந்தோனேசியாவில் 1945 முதல் 1966 வரை செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் பதவி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசிய பிரதமர் (ஆங்கிலம்: Prime Minister of Indonesia; இந்தோனேசியம்: Perdana Menteri Indonesia) என்பது இந்தோனேசியாவில் 1945 முதல் 1966 வரை செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் பதவி ஆகும்.
அந்தக் காலகட்டத்தில், இந்தோனேசிய பிரதமர் என்பவர் இந்தோனேசிய அமைச்சரவையின் பொறுப்பாளராக இருந்தார். இந்தோனேசிய அமைச்சரவை என்பது இந்தோனேசிய மக்களவை மற்றும் இந்தோனேசிய அதிபர் எனும் இந்தோனேசிய அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளில் ஒன்றாகும்.
சுகார்னோவின் 1959-ஆம் ஆண்டு தீர்ப்பாணையைத் தொடர்ந்து (President Sukarno's 1959 Decree), 1959-ஆம் ஆண்டு தொடங்கி; 1966-ஆம் ஆண்டு வரை; அதிபர் சுகார்னோ தொடர்ந்து இந்தோனேசியாவின் பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
Remove ads
பொது
18 ஆகத்து 1945 அன்று, விடுதலை நாள் அறிவிப்பிற்குப் பின்னர் ஒரு நாள் கழித்து, சுகார்னோ அதிபராக நியமிக்கப்பட்டார்; மற்றும் 1945 இந்தோனேசியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
அதில் இந்தோனேசியா ஓர் அதிபர் முறையைச் சுற்றி கட்டமைக்கப்பட்டது என்று கூறப்பட்டது; எனவே, ஒரு பிரதமருக்கான அதிகாரம் அரசியலமைப்பில் எதுவும் இல்லை; அமைச்சரவை என்பது நேரடியாக அதிபரின் பொறுப்பின் கீழ் வருகிறது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.[1][2][3][4]
துணை அதிபரின் தீர்ப்பாணை
இருப்பினும், இந்தோனேசிய துணை அதிபரின் எண்.எக்ஸ் (Vice-Presidential Edict No.X) தீர்ப்பாணையைத் தொடர்ந்து, 1945 நவம்பர் 11 அன்று, இந்தோனேசிய மத்திய தேசியக் குழு (Central Indonesian National Committee); (Komite Nasional Indonesia Pusat) (KNIP) ஒரு தற்காலிக அமைச்சரவைக்குப் பொறுப்பேற்றது.
இதைத் தொடர்ந்து, அமைச்சரவை நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், சுத்தான் சாரீர் முதல் பிரதமராக வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் தன் சொந்த அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்க அனுமதி வழங்கினால் மட்டுமே பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என ஒப்புதல் தெரிவித்தார். புதிய அமைச்சரவை 1945 நவம்பர் 14 அன்று அறிவிக்கப்பட்டது.[5]
உட்பூசல்கள்
உள்நாட்டு அரசியல் பூசல்கள் காரணமாக 1946 மார்ச் 28 அன்று சுத்தான் சாரீர் பதவி துறப்பு செய்தார். ஆனாலும் அடுத்த அமைச்சரவையை அமைக்குமாறு சுத்தான் சாரீர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அந்த அமைச்சரவை 1946 அக்டோபரில் சரிந்தது. இருப்பினும் மீண்டும், புதிய அமைச்சரவையில் பிரதமராகத் தொடர சுத்தான் சாரீர் ஒப்புக்கொண்டார். இறுதியாக, உட்பூசல்கள் காரணமாக சுத்தான் சாரீர் 1947 சூன் 27 அன்று பதவி துறப்பு செய்தார்.[6][7]
அவருக்குப் பதிலாக அமீர் சஜாரிபுடின் (Amir Sjarifuddin) என்பவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்; மேலும் சுத்தான் சாரீர் ஐக்கிய நாடுகள் அவையில் இந்தோனேசியப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[8][9] இந்தோனேசிய பிரதமர் பதவி 25 சூலை 1966-இல் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads