இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனம்

இந்தோனேசியாவின் துறை சாராத அரசு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia

இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனம்
Remove ads

இந்தோனேசிய புள்ளிவிவரங்கள் நிறுவனம் (இந்தோனேசியம்: Badan Pusat Statistik (BPS); ஆங்கிலம்: Statistics Indonesia; Central Agency of Statistics) என்பது இந்தோனேசியாவின் துறை சாராத அரசு நிறுவனமாகும்.[1] இந்த நிறுவனம் புள்ளிவிவர ஆய்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பாகும்.[2]

விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...

இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளராக இந்தோனேசிய அரசாங்கம் முதன்மை வகிக்கிறது. இருப்பினும் புள்ளிவிவரத் தரவுகளைப் பொதுமக்களுக்கும் பெற்றுக் கொள்ள இயலும். ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவை தேசிய மற்றும் மாநிலச் சமூக-பொருளாதாரம், உற்பத்தி நிறுவனங்கள், மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் சக்தி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியவை ஆகும்.[3]

Remove ads

பொது

1960-ஆம் ஆண்டு, மத்திய புள்ளியியல் பணியகமாக (இந்தோனேசியம்: Biro Pusat Statistik (BPS); ஆங்கிலம்: Central Bureau of Statistics) நிறுவப்பட்ட இந்த நிறுவனம்,[4] இந்தோனேசிய அதிபரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது.

அதன் செயல்பாடுகளில் பிற அரசு நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தரவுகளை வழங்குதல்; மற்றும் பொருளாதாரம், சமூக மாற்றம் மற்றும் மேம்பாடு குறித்த புள்ளிவிவரங்களை அவ்வப்போது வெளியிட புள்ளிவிவர ஆய்வுகளை நடத்துதல்; ஆகியவை அடங்கும்.

அத்துடன் இந்த நிறுவனம், பிற பொது அலுவலகங்களில் தரவு செயலாக்கப் பிரிவுகளுக்கு, புள்ளிவிவர தயாரிப்புகளுக்கு ஆதரவு வழங்கி ஊக்குவிப்பதிலும் முன்னோடியாக விளங்குகிறது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads