இப்ராகிம் முகமது சாலி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இப்ராகிம் முகமது சாலி (Ibrahim Mohamed Solih (திவெயி: އިބްރާހީމް މުޙައްމަދު ޞާލިޙު; அரபி: إبراهيم محمد صالح; பிறப்பு மே 4, 1964) என்பவர் மாலைத்தீவுகள் அரசியல்வாதி ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகளில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் தற்போது பிரதமர் பதவி வகிக்கும் அப்துல்லா யாமீனை வெற்றி பெற்று நவம்பர் 17,2018 இல் பிரதமராக பெறுபேற்க உள்ளார்.

விரைவான உண்மைகள் இப்ராகீம் முகமது சாலி, மாலைத்தீவுகளின் பிரதமர் Elect ...

தனது 30 ஆம் வயதில் சொந்த தொகுதியான ஃபாதிப்பொகுவில் இருந்து 1994 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். மாலைத்தீவுகள் விடுதலைக் கழகத்திலும் (எம் டி பி) 2003 முதல் 2008 வரை நடைபெற்ற மாலைத்தீவுகள் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் இவரின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2] இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் நவீனத்துவ அரசியலமைப்பு மற்றும் பலகட்சி ஜனநாயகம் போன்றவற்றை வரலாற்றிலேயெ இந்தக் கட்சி முதல் முறையாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மூத்த உறுப்பினராகவும் நாட்டுச் சட்ட மாமன்றத்திலும் செயல்பட்டு வருகிறார்.[3]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads