இப்ராஹிம் அல்காசி
நாடக இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இப்ராஹிம் அல்காசி (Ebrahim Alkazi) (18 அக்டோபர் 1925 – 4 ஆகத்து 2020 [1][2] ) இந்தியாவைச் சேர்ந்த நாடக இயக்குநரும் நாடக ஆசிரியருமாவார். இவர் ஒரு கண்டிப்பான ஒழுக்கநெறி கொண்டவர். இவர் ஒரு நாடகத்தைத் தயாரிப்பதற்கு முன்பு கடுமையான ஆராய்ச்சி செய்வார். இது இயற்கை வடிவமைப்பில் முக்கியமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது தரநிலைகள் பின்னர் மிகவும் செல்வாக்கு பெற்றன.[3] இவர் புதுதில்லியின் தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராகவும் இருந்தார் (1962-1977) [4][5][6] இவர் ஒரு பிரபலமான கலை ஆலோசகரும், சேகரிப்பாளரும், கண்காட்சி உரிமையாளரும் ஆவார். மேலும் தனது மனைவி ரோஷன் அல்காசியுடன் இணைந்து தில்லியில் பாரம்பரிய கலைக் கண்காட்சியையும் நிறுவினார். [7]
தனது வாழ்நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை நடத்திய இவர், உள்ளரங்கங்கள் மற்றும் திறந்தவெளி ஆகிய இரண்டையும் பயன்படுத்தினார். திறந்தவெளி இடங்களுக்கான இவரது வடிவமைப்புகள் அவற்றின் காட்சித் தன்மைக்காகவும், ஒவ்வொரு மேடைத் தயாரிப்பிலும் இவர் முன்பு இயக்கிய அசல் சுழல்களுக்காகவும் பாராட்டப்பட்டன.[3] இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஒரு நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர், 1950 ல் பிபிசி ஒளிபரப்பு விருதை வென்றார். கிரீஷ் கர்னாட்டின் துக்ளக், மோகன் ராகேஷின் ஆஷாத் கா ஏக் தின், தரம்வீர் பாரதியின் அந்தா யுக் , ஏராளமான வில்லியம் சேக்சுபியர் மற்றும் கிரேக்க நாடகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் இயக்கியுள்ளார்.[4] இவரது ஆரம்பகால நாடகங்கள் பல மேற்கு நாடுகளிலிருந்து வந்தவை. அவை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டன. இருப்பினும், அல்காசி அவற்றை தனது பார்வையாளர்களிடம் மிகவும் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் இந்தியக் கண்ணோட்டங்களைக் கொண்டதாக மாற்றினார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மகாராட்டிராவின் புனேவில்] பிறந்த அல்காசி, இந்தியாவில் வர்த்தகம் செய்யும் ஒரு பணக்கார சவுதி அரேபிய தொழிலதிபர் மற்றும் ஒரு குவைத் தாயின் மகனாவார்.[8] இவர் தனது பெற்றோருக்கு ஒன்பது குழந்தைகளில் ஒருவர். 1947ஆம் ஆண்டில், இவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தனர். அல்காசி இந்தியாவிலேயே தங்கியிருந்தார்.[9] அரபு, ஆங்கிலம், மராத்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் படித்த அல்காசி புனேவின் புனித வின்சென்ட் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் மும்பை புனித சேவியர் கல்லூரியிலும் பயின்றார் . இவர் கல்லூரியில் மாணவராக இருந்தபோது, சுல்தான் "பாபி" பதாம்சியின் ஆங்கில நாடக நிறுவன குழுமத்தில் சேர்ந்தார். பின்னர் இவர் 1947இல் இலண்டனில் உள்ள நாடகப் பள்ளியில் (ராடா) பயிற்சி பெற்றார்.[10] ஆங்கில நாடக அமைப்பு மற்றும் பிபிசி ஆகிய இரண்டாலும் கௌரவிக்கப்பட்ட பின்னர் இலண்டனில் இவருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இவர் 1950 முதல் 1954 வரை இயங்கிவந்த ஒரு நாடக குழுமத்தில் சேர எண்ணி இந்த வாய்ப்பை நிராகரித்தார்.[3]
Remove ads
தொழில்
தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இவர் மும்பை முற்போக்கு கலைஞர்கள் குழுவுடன் தொடர்பு கொண்டார். அதில் எம். எஃப். உசைன், எஃப். என். சௌசா, எஸ். எச். ராசா, அக்பர் பதாம்சி, தயிப் மேத்தா, போன்ற கலைஞர்கள், பின்னர் இவரது நாடகங்களுக்கு வண்ணம் தீட்டவும், இவரது தொகுப்புகளை வடிவமைக்கவும் வந்தவர்கள்.[11] இவர் இயக்குவதைத் தவிர, 1953 ஆம் ஆண்டில் தியேட்டர் யூனிட் புல்லட்டின் என்ற பத்திரிக்கை ஒன்றை நிறுவினார். இது மாதந்தோறும் வெளியிடப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் நாடக நிகழ்வுகள் குறித்து அறிவித்தது. பின்னர், இவர் மும்பையில் நாடகப்பள்ளியை நிறுவி அதன் முதல்வரானார்.[3]
தேசிய நாடகப் பள்ளியின் இயக்குநராக, இவர் இந்தி நாடகத்தை தனது பார்வையின் சிறப்பையும், தனது தொழில்நுட்ப ஒழுக்கத்தின் நுணுக்கத்தையும் புகுத்தி புரட்சி செய்தார். விஜயா மேத்தா, ஓம் சிவ்புரி, ஹர்பால் திவானா, நீனா திவானா, ஓம் பூரி, (பால்ராஜ் பண்டிட்) நசிருதீன் ஷா, மனோகர் சிங், உத்தரா பாவ்கர், ஜோதி சுபாஷ், சுஹாஸ் ஜோஷி, பி. ஜெயஸ்ரீ, ஜெயதேவ் மற்றும் ரோகினி ஹட்டங்காடி உள்ளிட்ட பல பிரபல திரைப்பட மற்றும் நாடக நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு இங்கு பயிற்சி அளித்தார்.[12] அங்கு இருந்தபோது இவர் 1964ஆம் ஆண்டில் ரெபர்ட்டரி நிறுவனத்தை உருவாக்கி, தான் வெளியேறும் வரை அவற்றின் தயாரிப்புகளை இயக்கியுள்ளார்.
Remove ads
விருதுகளும் அங்கீகாரமும்
நாடகங்களின் உணர்திறன் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல், நவீன பாரம்பரிய வெளிப்பாட்டை இந்திய பாரம்பரியத்துடன் வெற்றிகரமாக கலந்தது போன்றவைகளுக்காக இவர் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பல விருதுகளை வென்றுள்ளார்.[3]
நாடகங்களுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக 'ரூப்வேத் பிரதிஷ்டானி'ன் தன்வீர் விருதுகளின் (2004) முதல் விருது பெற்ற [13] இவர் பத்மசிறீ (1966), பத்ம பூசண் (1991), பத்ம விபூசண் (2010) உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய கழகமான சங்கீத நாடக அகாதமியால் இவருக்கு இரண்டு முறை விருது வழங்கப்பட்டுள்ளது. நாடக இயக்குநருக்கான் சங்கீத நாடக அகாதமி விருதினை 1962லும், பின்னர், நாடங்களுக்கான வாழ்நாள் சாதனைகளுக்கு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவமும் இவருக்கு வழங்கப்பட்டது.
சொந்த வாழ்க்கை
இவர் தனது அனைத்து நாடகங்களுக்கும் ஆடைகளை வடிவமைத்த ரோஷன் என்பவரை (இறப்பு 2007) திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி இந்திய ஆடைகளின் வரலாறு குறித்து இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1977ஆம் ஆண்டில் தில்லியில் உள்ள திரிவேணி கலா சங்கத்தில் கலை பாரம்பரியக் கண்காட்சியை நிறுவி அதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார்.[14][15] தம்பதியருக்கு நாடக இயக்குநரும், தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் தலைவருமான அமல் அல்லானா மற்றும் நாடக இயக்குநரான பைசல் அல்காசி ஆகிய இரு மகன்கள் இருந்தனர்.
Remove ads
மேலும் படிக்க
- Ananda Lal, The Oxford Companion to Indian Theatre, Oxford University Press (2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564446-8
- The Alcazar Of Visual Memory
- "Theatre is revelation (Interview)". தி இந்து. 24 February 2008 இம் மூலத்தில் இருந்து 2 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080302010357/http://www.hindu.com/mag/2008/02/24/stories/2008022450160500.htm.
படைப்புகள்
- Alkazi collection of photography, with Rahaab Allana, Pramod Kumar, Brunei Gallery. Grantha Corporation, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89995-18-9.
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads