இமாம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இமாம் (Imam; அரபி: إمام) என்பது இசுலாமியர்களின் தலைமை நிலையை குறிக்கும். பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரை குறிக்கும். இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான நிகழ்வுகளில் மக்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும் இருப்பார்.

சியா இசுலாமியர்கள் பழக்கப்படி இமாம் என்பவர் முகம்மது நபி அவர்களின் குடும்பத்தினர்களான பன்னிரு இமாம்களை குறிக்கும்.[1][2]

Remove ads

பணிகள்

Thumb
கெய்ரோ நகர பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படும் ஓவியம்
  • தொழுகை நடத்துவது.
  • வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கம் செய்வது.
  • இசுலாமிய போதனைகள் செய்வது.
  • ரமலான் நோன்பு மாத தராவீஹ் தொழுகை நடத்துவது.[3]
  • இசுலாமிய பண்டிகைகளான ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் போன்றவற்றில் வாஜிபான சிறப்பு தொழுகை நடத்துவது.[3]
  • மத விசயங்களில் ஆலோசனை கூறுவது.
  • பல பள்ளிவாசல்களில் இமாம் குழந்தைகளுக்கு காலை மாலை இசுலாமிய படிப்புக்கான வகுப்புகள் எடுப்பர்.[4]
Remove ads

தகுதிகள்

  • இமாம் என்பவர் குர்ஆனைப் புரிந்து கொண்டு சரியாக மற்றும் அழகாக அதை ஓதிக்காண்பிக்க வேண்டும்.[3]
  • இமாம் சமூகத்தின் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக இருக்க வேண்டும்.[3]
  • சில சமூகங்களில், இமாம் சில சிறப்பு பயிற்சிகள் படித்து பணியமர்த்த படுகிறார்.[3]
  • இமாம் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், மற்றும் அரபு மொழி அறிவு இருக்க வேண்டும்.[4]

ஹதீஸ் தொகுப்பாளர்கள்

முகம்மது நபி கூறிய ஹதீஸ்களை தொகுத்த முகம்மது அல்-புகாரி, முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், இமாம் திர்மிதி, இமாம் நஸாயீ , இமாம் அபூதாவூத் போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.

மத்ஹப்

சுன்னா இசுலாமிய பிரிவை சேர்ந்த நான்கு மத்ஹப் தோற்றுவித்த இமாம் மாலிக் [5], இமாம் அபூஹனீபா, இமாம் அகமது இப்னு ஹன்பல், இமாம் ஷாபி போன்றவர்களும் இமாம் என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads