இமையம் (எழுத்தாளர்)

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

இமையம் (எழுத்தாளர்)
Remove ads

இமையம் என்ற புனைபெயரில் எழுதும் வெ. அண்ணாமலை (பிறப்பு: மார்ச் 10, 1964) நன்கறியப்பட்ட தமிழக எழுத்தாளர். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் இமையம், பிறப்பு ...

இவருடைய முதல் புதினமான "கோவேறு கழுதைகள்", இலட்சுமி ஓம்சுற்றோம் (Lakshmi Holmström) என்பவரால், “Beasts of Burden“ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை என்று புகழ்ந்து கூறியுள்ளார்.[சான்று தேவை]

எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்[2]

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1964 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கழுதூரில் பிறந்த இவரது இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ச.புஷ்பவள்ளி - முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகள் கதிரவன் மற்றும் தமிழ்ச்செல்வன்.

Thumb
இமையம்

நூல்கள்

தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் நிலவும் முரண்பாடுகளையும் ஆதிக்கத்தின் குரூரங்களையும் முன் வைக்கிறார்.

புதினங்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

சிறுகதைகள்

இமையம் - சிறுகதைகள்

மொழிப் பெயர்க்கப்பட்ட நூல்கள்

  • கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN)) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009 இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது.
  • ஆறுமுகம் நாவல் கதா பதிப்பகம் Arumugam என்ற பெயரில் ஆங்கிலத்தில் 2006ல் வெளியிட்டுள்ளது.
  • பெத்தவன் என்ற நெடுங்கதை Oxford University Press என்ற பதிப்பகத்தின் மூலம் 'The Begetter' என்ற பெயரில் 2015 இல் வெளியிட்டுள்ளது.
  • Video Mariamman and Other stories என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக Speaking Tiger பதிப்பகம் 2022ல் வெளியிட்டுள்ளது.
  • If there is a God and other stories சிறுகதைத் தொகுப்பாக Ratna Publications பதிப்பகத்தால் 2022ல் வெளியிட்டுள்ளது.
  • An order from the sky and other stories என்ற தலைப்பில் HarperCollins India மற்றும் Tamilnadu Textbook corporation கூட்டு தயாரிப்பில் 2023ல் வெளியிட்டுள்ளது.
  • செல்லாத பணம் நாவல் ஆங்கிலத்தில் A Woman Burnt என்ற தலைப்பில் Simon and Schuster பதிப்பகத்தால் 2023ல் வெளியிட்டுள்ளது.
  • Vazhga Vazhga and other stories சிறுகதைத் தொகுப்பாக Penguin Random House India பதிப்பகத்தால் 2023ல் வெளியிட்டுள்ளது.
  • எங் கதெ நாவல் ஆங்கிலத்தில் She & I என்ற தலைப்பில் Speaking Tiger பதிப்பகம் 2024ல் வெளியிட்டுள்ளது.
Remove ads

விருதுகளும் சிறப்புகளும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads