சுந்தர ராமசாமி

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.[1] நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் சுந்தர ராமசாமி (1931-2005), பிறப்பு ...

இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

Remove ads

இலக்கியச் செல்வாக்குகள்

இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[3]

Remove ads

படைப்புகள்

நாவல்

சிறுகதைகள்

  • சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)

விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை

  • ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
  • ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
  • காற்றில் கரைந்த பேரோசை
  • விரிவும் ஆழமும் தேடி
  • தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
  • இறந்த காலம் பெற்ற உயிர்
  • இதம் தந்த வரிகள் (2002)
  • இவை என் உரைகள் (2003)
  • வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
  • வாழ்க சந்தேகங்கள் (2004)
  • புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
  • புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
  • மூன்று நாடகங்கள் (2006)
  • வாழும் கணங்கள் (2005)

கவிதை

  • சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)

மொழிபெயர்ப்பு

நினைவோடைகள்

சிறுகதைகள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் சிறுகதைகள், இதழ் ...
Remove ads

சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்

இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[4]

சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்

தமிழ்க் கணிமைக்கான விருது

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

இளம் படைப்பாளர் விருது

சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.

Remove ads

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads