இரகுநாத நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 – 1645) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் மூன்றாவது மன்னன்.[1]
Remove ads
வம்சம்
இரகுநாத நாயக்கரின் தந்தை அச்சுதப்ப நாயக்கர் (1560–1600). தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர் இரகுநாத நாயக்கர். இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.இரகுநாத நாயக்கரின் மகன் விஜயராகவ நாயக்கர் (கி.பி.1633 – 1673).
ஆட்சிப்பகுதி
இவர் தமது ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கண்டார். ஈழத்தில் வெற்றி பெற்ற பிறகு தஞ்சையை நோக்கித் திரும்பும் வழியில் தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் என்பவனோடு போரிட்டார். ஜக்கராயன் விசயநகரப் பேரரசுக்கு உட்பட்ட கோலார் பகுதியை ஆண்டு வந்தவன் ஆவான். இவன் விசயநகரப் பேரரசைக் கவரச் சதி செய்தான். இதனை யாசம நாயக்கர் என்ற குறுநில அரசர் அறிந்தார். இவர் விசயநகரப் பேரரசின் விசுவாசி ஆவார். யாசம நாயக்கர் ஒரு பெரும்படை திரட்டிச் சென்று ஜக்கராயனோடு போரிட்டார். போர் கல்லணைக்கு அருகில் உள்ள தோப்பூர் ( தற்போது அது தோகூர் என்றழைக்கப்படுகிறது) [2]என்னும் இடத்தில் கி.பி.1616இல் நடைபெற்றது. இப்போரில் ஜக்கராயனுக்கு மதுரை, செஞ்சி நாயக்கர்கள் துணைநின்றனர். ஜக்கராயன் செஞ்சி, மதுரை நாயக்கர்களோடு சேர்ந்து கொண்டு தஞ்சைக்கு மேற்கே உள்ள கல்லணையை இடிக்க முற்பட்டான். இதனை அறிந்த இரகுநாத நாயக்கர் பெரும்படையுடன் சென்று தோப்பூர் என்னும் இடத்தில் ஜக்கராயன் படைகளோடு பெரும்போர் செய்தார். ஜக்கராயனுக்குத் துணைநின்ற மதுரை நாயக்கரும், செஞ்சி நாயக்கரும் தோல்வியுற்றுப் போர்க்களம் விட்டோடினர். ஆனால் ஜக்கராயன் போரில் கொல்லப்பட்டான். இரகுநாத நாயக்கர் மாபெரும் வெற்றி பெற்றார். தோப்பூர்ப் போர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த போராகக் கருதப்படுகிறது. இரகுநாத நாயக்கர் தம் முன்னோர் போல, விசயநகரப் பேரரசிற்கு ஆதரவாளராகவே இருந்தார்.
Remove ads
வாணிபம்
இரகுநாத நாயக்கர் காலத்தில் டச்சு, டென்மார்க், இங்கிலாந்து, போர்த்துகீசு வாணிகர்கள் தஞ்சைக்கு வருகை புரிந்து வாணிபத்திற்காகப் போட்டியிட்டனர். டென்மார்க் நாட்டவர் தரங்கம்பாடி என்னும் சிறு துறைமுகப்பட்டினத்தில் தங்கி வாணிபம் செய்ய இரகுநாத நாயக்கர் அனுமதி வழங்கினார். இரகுநாத நாயக்கர் டென்மார்க் நாட்டவரோடு கொண்ட நட்புறவால் வாணிபம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வீணை
தஞ்சாவூரில் வீணை முதன்முதலாக இம்மன்னர் காலத்தில் முதன் முதலில் செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாத வீணை என்றும் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads