இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த அரசர் ஆவார்.[1] இவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்புகளை ஆண்டார்.[2][3] நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார்.[4] 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, திருச்சி நகரில் இவரது சிலையை நிறுவினார்.[5] பிறகு 2002-ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் ஒரு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது[6].
Remove ads
வாழ்க்கை
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி. பி. 675-ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் பிறந்தார்.[7] இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்கிற இளங்கோவதிராயர். கி. பி. 705-ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்துப் பன்னிரண்டு போர்களில் போரிட்டுள்ளார்.[8] நாலடியார் நூலில் இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது.[9][10] இவர் தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.[11]
Remove ads
போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்கள்[12]
- கொடும்பாளுர்
- மணலூர்
- திங்களூர்
- காந்தலூர்
- அழுந்தியூர்
- காரை
- மரங்கூர்
- புகழி
- அண்ணல்வாயில்
- செம்பொன்மாரி
- வெண்கோடல்
- கண்ணனூர்
சிறப்புப்பெயர்கள்
- ஸ்ரீ சத்ரு மல்லன்
- ஸ்ரீ கள்வர் கள்வன்
- ஸ்ரீ அதிசாகசன்
- ஸ்ரீ மாறன்
- அபிமான தீரன்
- சத்ரு கேசரி
- தமராலயன்
- செரு மாறன்
- வேல் மாறன்
- சாத்தன் மாறன்
- தஞ்சைக் கோன்
- வல்லக் கோன்
- வான் மாறன்[13]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
