முத்தரையர்

தமிழ்நாடில் இருந்த அரச மரபுகளில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

முத்தரையர்
Remove ads

முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.

Thumb
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி

தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1][2]

7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[3] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[4]

முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .[5][6]

Remove ads

முத்தரையரின் தோற்றம்

முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[7], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.

முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[8][9][10]

Remove ads

முத்தரைய அரசர்கள்

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
  • இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  • சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)
Remove ads

கல்வெட்டுக் குறிப்புகள்

முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:[11] [12]

  • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
  • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
  • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
  • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
  • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.

முத்தரையர் பட்டம்

முத்தரையன் என்பது மத்தியகால இந்தியாவின் சோழ அரசாங்கத்தில் பல்வேறு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு பட்டப் பெயராக இருந்தது.

தமிழகத்தில் வலையர் மற்றும் கள்ளர் சாதியினரின் பட்டப்பெயராக கல்வெட்டில் வருகின்றன. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டம்இலுப்பூர் வட்டம்‌, வெள்ளாஞ்சார்‌ இடிந்த சிவன்‌ கோயில்‌ கருவறை பின்புறம்‌ வடபகுதி குழுதகத்தில்‌ உள்ள கல்வெட்டில் வெள்ளாஞ்சாரிலிருந்த வலையர் இனத்தை சேர்ந்த எதிர்முனை கண்ட முத்தரையன் என்பவனுக்கு கள்ளர் மரபை சேர்ந்த சார்‌ அரையன்‌ தன்னன்‌ கடம்பராயர் விற்றுக்‌ கொடுத்த குடிகாட்டு குளம்‌ வயலினைப்‌ பற்றியது.[13] அதே போல் மூன்றாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் வடவாலி நாட்டில் உள்ள திருவெள்ளரையின் குக்கிராமமான புதுக்குடி என்ற ராஜேந்திர சோழமங்கலத்தில் கனி உரிமை பெற்ற கள்ளர் இனத்தைச் சேர்ந்த மணவாள முத்தரையன் கொடுத்த கிழிப்புணைத்திட்டு என்னும் பத்திரத்தைக் கொடுத்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. தற்போது புதுக்குடி என்ற கிராமம் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்ததுள்ளது. கோவில் அறங்காவலர்களிடம் இருந்து நான்கு பங்குகளின் விலையான 4000 காசு முழுவதையும் ஒரு கிலியில் (பையில்) பெற்றதாக உறுதியளித்து, பங்கு விற்பனையாளர்களிடம் ஒப்படைத்தார்.[14]

Remove ads

பாடல் குறிப்புகள்

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[15] [16]

கோவில்கள்

முத்தரையர்கள் ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads