இரண்டாம் பௌத்த சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் பௌத்த சங்கம் (Second Buddhist council) கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் கிமு 334ல், இந்தியாவின் பிகார் மாநிலத்தின், பண்டைய வைசாலி நகரத்தில் நடைபெற்றது.
முதிய மற்றும் இளைய பிக்குகளிடையே ஏற்பட்ட கருத்துப் பிணக்குகளை தீர்த்து வைக்க இரண்டாம் பௌத்த சங்கம், கிமு 334ல் கூட்டப்பட்டது.
இரண்டாம் பௌத்த சங்கக் கூட்டத்தில், திரிபிடகத்தின் ஒன்றான வினயபிடகத்தில் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்ய, சீர்திருத்த கருத்துக்கள் கொண்டிருந்த முதியவர்களான ஸ்தவவீரா நிக்காய[1] பௌத்த சங்க பிக்குகள் வலியுறுத்தினர். ஆனால் சமய அடிப்படைவாதக் கருத்துக் கொண்ட பெரும்பான்மையான இளையவர்களான மகாசங்கிகா [2] குழுவினர் இதனை ஏற்கவில்லை. எனவே முதிய ஸ்தவவீரா நிக்காய பௌத்த சங்கத்தினர் தனியாக பிரிந்து சென்றனர். [3] [4][5]
Remove ads
தேரவாத பௌத்தர்களின் கணிப்பு
தேரவாத பௌத்தர்களின் கூற்றுப்படி, இரண்டாம் பௌத்த சங்கத்தில், பின்வரும் 10 கருத்துகளில் பிணக்குகள் தோன்றியதாக கூறுகிறது. அவைகள்
- பிக்குகள் தம்மிடத்தில் உப்பைச் சேமித்து வைத்துக் கொள்தல்.
- நண்பகலுக்குப் பின்னர் உணவு உண்பது குறித்து.
- ஒரு முறை ஒரு கிராமத்தில் பிச்சை உணவு வாங்கி உண்ட பின்னர், மீண்டும் உணவிற்காக பிச்சை எடுக்கச் செல்லுதல் குறித்து.
- ஒரே இடத்தில் குழுமியுள்ள பிக்குகளுடன் இணைந்து உபவாச சடங்கினை மேற்கொள்தல். [6]
- சங்கத்தின் கூட்டம் முழுமையடையாத நிலையில் அதிகாரபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்தல்.
- ஒரு பௌத்த சங்க குருவால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பயிற்சியை பிக்குகள் தொடர்வது குறித்து.
- மதிய உணவிற்குப் பின்னர் புளித்த பால், தயிர் அல்லது மோர் அருந்துவது குறித்து.
- ஒரு பானம் புளிப்பதற்கு முன்பு அருந்துவது குறித்து. (எடுத்துக்காட்டு: பதநீர் புளித்து கள்ளாக மாறிய பிறகு அதை அருந்துவது குறித்து)
- சரியான அளவில் இல்லாத கம்பளி போர்வைகளை பயன்படுத்துவது குறித்து.
- தங்கம் மற்றும் வெள்ளியால் செய்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து.
இந்த பத்து விதிகளில், பிக்குகள், மக்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை யாசகம் (பிட்சை) பெறுவது குறித்து அதிக கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
இரண்டாம் பௌத்த சங்கத்தின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், பிக்குகளின் நடத்தைகள் குறித்தான விநயபிடக விதிமுறைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யவில்லை. மேலும் பத்துக் கட்டளை மீறும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
- பௌத்த சங்கம்
- முதல் புத்த மாநாடு
- மூன்றாம் பௌத்த சங்கம்
- நான்காம் பௌத்த சங்கம்
- ஐந்தாம் பௌத்த சங்கம்
- ஆறாம் பௌத்த சங்கம்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads