வைசாலி, பண்டைய நகரம்

From Wikipedia, the free encyclopedia

வைசாலி, பண்டைய நகரம்
Remove ads

வைசாலி (Vaishali), இந்தியாவின், பிகார் மாநிலத்தின், வைசாலி மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் நகரமாகும். இந்நகரம் பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் வஜ்ஜி குடியரசின் தலைநகராக விளங்கியது.

விரைவான உண்மைகள் வைசாலி, பண்டைய நகரம் वैशालीVaiśālī, நாடு ...
Thumb
வைசாலியில் உள்ள புத்தரின் நினைவு ஸ்தூபி

.

Thumb
வைசாலியில் உள்ள புத்தரின் சிலை.

சமண சமயத்தின் 24-ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் வைசாலி நகரத்தில் பொ.ஊ.மு. 539-இல் பிறந்தவர். கௌதம புத்தர், தான் இறப்பிற்கு முன்னர், பொ.ஊ.மு. 483-இல் தனது இறுதி உபதேசத்தை பிக்குகளுக்கு இந்நகரில்தான் மேற்கொண்டார். பொ.ஊ.மு. 383-இல் வைசாலியில் இரண்டாம் பௌத்த மாநாடு நடந்தது. எனவே வைசாலி நகரம், பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் புனித தலமாக விளங்குகிறது.[1][2][3]

இந்நகரில் அசோகரின் தூண்கள் அமைந்துள்ளன. இங்குள்ள 36 அடி உயர தூணின் உச்சியில் சிங்கத்தின் உருவம் அமைந்துள்ளது. மேலும் செங்கற்களால் கட்டப்பட்ட குன்று போன்ற தூபியும் உள்ளது.

பொ.ஊ. 4-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த துறவி பாஹியான் மற்றும் பொ.ஊ. 7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகிய இருவரும் தங்களது பயணக் குறிப்பில் வைசாலி நகரத்தை குறித்துள்ளனர். அக்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர், 1861-ஆம் ஆண்டில் தற்போதைய வைசாலி மாவட்டத்தில் உள்ள பஸ்ரா எனும் கிராமத்தை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு, காலத்தால் காணாமல் போன வைசாலி நகரத்தை கண்டுபிடித்தார்.[4][5]

Remove ads

அமைவிடம்

வைசாலி நகரம் பாட்னாவிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபர்பூர் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

அருங்காட்சியகம்

இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம், விஷ்வசாந்தி தூண் அருகே அமைந்துள்ளது.

இதனையும் காண்க

வைசாலியில் குறிப்பிடத்தக்க பௌத்த சின்னங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads