இரண்டாம் யுவராசதேவன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் யுவராசதேவன் (Yuvarajadeva; ஆட்சிக் காலம் 980-990 பொ.ச.) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவன் மேலைச் சாளுக்கியர்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்க் கொண்டான். மேலும் அவர்களின் போட்டியாளரான பரமார அரசன் வாக்பதி முஞ்சாவால் தோற்கடிக்கப்பட்டான்.

விரைவான உண்மைகள் இரண்டாம் யுவராசதேவன், தஹாலாவின் மன்னன் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

யுவராசதேவன் சந்தேலர்களுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட தனது மூத்த சகோதரன் மூன்றாம் சங்கரகனனுக்குப் பிறகு பதவியேற்றான்.[1]

ஆட்சி

யுவராசதேவனின் வழித்தோன்றலின் கரன்பெல் கல்வெட்டு, இவன் பல நாடுகளின் மீது படையெடுத்ததாகவும், கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை சோமநாதர் கோயிலுக்கு அளித்ததாகவும் கூறுகிறது. இவனது மூதாதையர் இரண்டாம் இலட்சுமணராசாவும் இதே போன்ற பணியை மேற்கொண்டிருந்தான். வரலாற்றாசிரியர் வி. வி. மிராசியின் கூற்றுப்படி, இவை வழக்கமான புகழ்ச்சிகள், அவை உண்மை விளக்கங்களாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. [2] காரன்பெல் கல்வெட்டு யுவராசதேவன் ஒருமுறை புலியுடன் போரிட்டு கொன்றதாக பெருமை கொள்கிறது. [3]

யுவராசதேவனின் சகோதரி போந்தாதேவி, மேலைச் சாளுக்கிய ஆட்சியாளனான இரண்டாம் தலைப்பனை மணந்தாள். தைலப்பனின் எதிரியான பரமார மன்னன் முஞ்சா, காலச்சூரி நாட்டின் மீது படையெடுத்து அவர்களின் தலைநகரான திரிபுரியை தாக்கினான்.[4] முஞ்சா யுவராசதேவனை தோற்கடித்தான். காலச்சூரி தளபதிகளையும் கொன்றான். மேலும் திரிபுரியில் "அவனது வாளை உயர்த்தினான்ர்" என்று பரமாரார்களின் உதய்பூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.[5] முஞ்சா பின்னர் தைலப்பனால் தோற்கடிக்கப்பட்டு சிறைப் பிடிக்கப்பட்டான். பிற்கால சாளுக்கிய கல்வெட்டுகள் தைலப்பனின் வெற்றியை விவரிக்கும் போது அவனை "சேடி மன்னனை அழித்தவன்" என்றும் குறிப்பிடுகின்றன.[4]

வி. வி. மிராசியின் கூற்றுப்படி, யுவராசதேவன் முஞ்சாவுக்கு எதிராக திரிபுரியைப் பாதுகாக்கும் போது கொல்லப்பட்டிருக்கலாம். மேலும் முஞ்சா பின்னர் தைலப்பனால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவன் இறந்தபிறகு இவனது அமைச்சர்கள் இவனது மகனான இரண்டாம் கோகல்லனை திரிபுரியின் அரியணையில் அமர்த்தினர்.[3]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads