இரண்டாம் விக்ரகபாலன்

பால வம்ச அரசன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் விக்ரகபாலன் (Vigrahapala II) (ஆட்சி.கி.பி. 966 – 978) இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியில் ஆட்சி செய்த பால மன்னன் மூன்றாம் கோபாலனின் வாரிசாவார். பால வம்சத்தின் பத்தாவது ஆட்சியாளரான இவர் குறைந்தது 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அரசனான மகிபாலா ஆட்சிக்கு வந்தார். [1]

விரைவான உண்மைகள் இரண்டாம் விக்ரகபாலன், பாலப் பேரரசு ...
Remove ads

ஆட்சி

இவரது ஆட்சியின் போது, பாலப் பேரரசு பீகார் மற்றும் வடக்கு வங்காளத்துடன் குறைக்கப்பட்டது. வங்காளத்தின் கிழக்கிலிருந்து, சந்திர வம்ச மன்னன், கல்யாணசந்திரன் கௌட பிரதேசத்தையும், காமரூபத்தின் தலைநகரையும் கைப்பற்றினார். இருப்பினும் விக்ரகபாலன் கிழக்கு மற்றும் தெற்கு பீகார் மற்றும் வடக்கு வங்காளத்தின் மீது தனது கட்டுப்பாட்டை பராமரிக்க முடிந்தது. [2] இந்த வெற்றிகள் பாலப் பேரரசை கடுமையாக பலவீனப்படுத்தியது. இவரது வாரிசான மகிபாலாவின் கீழ் பால வம்சத்தின் மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads