இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர்

From Wikipedia, the free encyclopedia

இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர்
Remove ads

இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (Ramabai Bhimrao Ambedkar) (7 பிப்ரவரி 1898 - 27 மே 1935; இரமாய் அல்லது தாய் இரமா என்றும் அழைக்கப்படுகிறார்) பி.ஆர்.அம்பேத்கரின் முதல் மனைவியாவார். [1] இவர் தனது உயர் கல்வியையும் தனது உண்மையான திறனையும் தொடர உதவுவதில் ஆதரவாக இருந்ததாகக் அம்பேத்கர் கூறினார். [2] இவர் பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் இடம்பெற்றவர். இந்தியா முழுவதும் பல அடையாளங்களுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர், பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

இரமாபாய் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிக்கு தத்ரே (வலங்கர்) மற்றும் ருக்மிணி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் தனது மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் சங்கருடன் வனந்த் கிராமத்திற்கு அருகிலுள்ள மகாபுரா வட்டாரத்தில் வசித்து வந்தார். இவரது தந்தை தபோல் துறைமுகத்திலிருந்து கூடை மீன்களை சந்தைக்கு கொண்டு சென்று வாழ்வாதாரத்தை சம்பாதித்தார். இவர் சிறுமியாக இருந்தபொழுது இவரது தாயார் இறந்தார். பின்னர், தந்தையும் இறந்த பிறகு இவரது மாமாக்கள் குழந்தைகளை தங்களுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

Remove ads

திருமணம்

இரமாபாய் 1906 ஆம் ஆண்டில் மும்பையின் பைகுல்லாவின் காய்கறி சந்தையில் மிகவும் எளிமையான விழாவில் அம்பேத்கரை மணந்தார். அப்போது, அம்பேத்கருக்கு 15 வயது, இரமாபாய்க்கு ஒன்பது வயது. [3] அம்பேத்கர் இவரை பாசமாக "இராமு", என்றும், இவர் அம்பேத்கரை "சாகேப்" என்று அழைத்துக் கொண்டனர். [4] இவர்களுக்கு யசுவந்த், கங்காதர், ரமேசு, இந்து (மகள்) மற்றும் இராசரத்னா ஆகிய ஐந்து குழந்தைகள் இருந்தனர். யசுவந்த் (1912-1977) தவிர, மற்ற நான்கு பேரும் தங்கள் குழந்தை பருவத்திலேயே இறந்தனர். [5] [6]

Remove ads

இறப்பு

இரமாபாய் 1935 மே 27 அன்று மும்பையின் தாதர், இந்து காலனியில் உள்ள இராசகிருகத்தில் நோய்வாய்பட்டு இறந்தார். இவர் அம்பேத்கரை மணந்து 29 ஆண்டுகள் ஆகியிருந்தது. [3]

கணவரின் கடமை

1941 இல் வெளியிடப்பட்ட பி.ஆர்.அம்பேத்கரின் "பாக்கித்தான் பற்றிய எண்ணங்கள்" என்ற புத்தகம் இரமாபாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னுரையில், அம்பேத்கர் தன்னை ஒரு சாதாரண பிவா அல்லது பீமாவிலிருந்து டாக்டர் அம்பேத்கராக மாற்றியமைத்ததைப் பாராட்டுகிறார்.

செல்வாக்கும் பிரபலமான மரபும்

Thumb
இந்தியக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், மகாராட்டிராவில் உள்ள புனேவில் இரமாபாய் அம்பேத்கரின் சிலையை 2018 மே 30 அன்று திறந்து வைத்தார்

இரமாபாயின் வாழ்க்கை பின்வருவனவற்றில் இடம்பெற்றுள்ளது:

திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் நாடகம்

  • இரமாய், அசோக் கவாலி இயக்கிய 1992 நாடகம் மேடையிடப்பட்டது
  • விஜய் பவார் இயக்கிய 1990 ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான பீம் கர்ஜனா, இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் பிரதாமா தேவி நடித்திருந்தார்
  • யுக்புருஷ் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், 1993 மராத்தி சசிகாந்த் நாலவாடே இயக்கியுள்ள இந்த படத்தில், இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் சித்ரா கொப்பிகர் நடித்திருந்தார்
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், 2000 ஆங்கிலம் ஜபார் படேல் இயக்கிய படம், இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருந்தார்
  • டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 2005 கன்னடம் சரன்குமார் கபூர் இயக்கிய படம், இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் தாரா அனுராதா நடித்திருந்தார்
  • பிரகாஷ் ஜாதவ் இயக்கிய 2011 மராத்தி திரைப்படமான இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர், இரமாபாய் அம்பேத்கர் வேடத்தில் நிஷா பருலேக்கர் நடித்திருந்தார்
  • இரமாபாய், 2016 கன்னடம் எம்.ரங்கநாத் இயக்கிய படம், இரமாபாய் அம்பேத்கர் கதாபாத்திரத்தில் யக்னா ஷெட்டி நடித்திருந்தார். [7]
  • இந்தி தொலைக்காட்சித் தொடரான "டாக்டர் அம்பேத்கர்" டி.டி. நேசனலில் ஒளிபரப்பப்பட்டது
  • சோனி மராத்தியில் ஒளிபரப்பப்பட்ட மராத்தி தொலைக்காட்சித் தொடரான கர்ஜா மகாராஷ்டிரா (2018–19).
  • டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்: மகாமன்வாச்சி கௌரவ்கதா (2019), மராத்தி தொலைக்காட்சித் தொடர் ஸ்டார் பிரவாவில் ஒளிபரப்பானது. சிவானி ரங்கோல் இரமாபாய் அம்பேத்கராக நடித்திருந்தார்

[8] [9]

புத்தகங்கள்

  • 'இரமாய், யசுவந்த் மனோகர் எழுதியது
  • தியாகவந்தி ராம மௌலி, நானா தாகுல்கர், விஜய் பப்ளிகேசன்ஸ் (நாக்பூர்)
  • பிரிய ராமு, யோகிராஜ் பாகுல், கிரந்தாலி வெளியீடு [4]
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads