இரவிகாந்த்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரவிகாந்த் (Ravikanth) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவரு குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1][2]

விரைவான உண்மைகள் இரவிகாந்த், பிறப்பு ...

தொழில்

இரவி ஒலிப் பொறியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்நிறுவனம் மூடப்பட்டபோது, இவர் ஒரு நாடக குழுவில் சேர்ந்தார். குழுவில், இயக்குநர் கே. பாலசந்தரின் இணை இயக்குநரான அனந்துக்கு சாருஹாசன் இவரை அறிமுகப்படுத்தினார். விரைவில், இரவிக்கு ரவிகாந்த் என்ற திரைப் பெயர் கொடுக்கப்பட்டு, பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் (1987) திரைப்படத்தில் அறிமுகமானார்.[3][4] இந்த காலகட்டத்தில், இவர் அபூர்வ சகோதரர்கள் (1989) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். ஆனால் படத்தின் நீளம் கருதி அவரது பகுதிகள் குறைக்கப்பட்டன. ரவிகாந்த் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்தார், கே. பாலசந்தரின் தயாரிப்புகளான சஹானா, சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்தார்.[5]

2000 களில், ரவிகாந்த் சரோஜா (2008) தொடங்கி வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்தார். வெங்கட் பிரபுவின் நகைச்சுவை நாடகப்படமான கோவாவில், இரவிகாந்த் பதினொரு வித்தியாசமான கதாபாத்திரங்களை சித்தரித்து நடித்தார்.[3][6] அதன் பின்னர் இவர் அதே இயக்குனருடன் மங்கத்தா, பிரியாணி (2013) போன்ற படங்களில் தோன்றினார். 2000 களில் இவர் நடித்து பிரேம்ஜி- முக்கிய பாத்திரத்தில் நடித்த 2010, பாக்யராஜ் மற்றும் சிலம்பரசன் நடித்த கெட்டவன் போன்றவை தயாரிப்பின் நடுவில் கைவிடப்பட்டன.[4]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

இரவிகாந்த் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் 2000 ஆம் ஆண்டில் நடிகை அம்பிகாவை மணந்தார். பின்னர் இவர் 2002 இல் அம்பிகாவை விவாகரத்து செய்தார்.[7][8]

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads