சக்ரா
2021 தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்ரா (Chakra) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். அறிமுக இயககுநர் எம். எஸ். ஆனந்தன் எழுதி இயக்கிய இந்த படத்தில் விஷால், சிரத்தா சிறீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஜினா கசாண்ட்ரா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது கணினி குற்றங்கள் மற்றும் இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[1][2] கணினி ஊடுருவல்காரரை வீழ்த்த ஒன்றாக வேலை செய்யும் ஒரு படை வீரர் மற்றும் ஒரு காவல் அதிகாரியை இந்த படம் பின் தொடர்கிறது. இப்படம் 2021 பெப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது, படம் நேர்மறையான, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]
Remove ads
கதைச்சுருக்கம்
இந்திய விடுதலை நாள் கொண்டாட்டங்கள் நடக்கும் நாளன்று சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் களவு நடக்கிறது. இந்த திருட்டின்போது யாரும் தாக்கப்படாமல், கொல்லப்படாமல் நடக்கிறது. இந்த திருட்டுகளில் ஒரு திருட்டாக இராணுவ அதிகாரியான சந்துருவின் (விஷால்) வீட்டிலும் திருட்டு நடக்கிது. திருட்டில் அவரது வீட்டிலுள்ள அசோக சக்ரா விருதும் காணாமல் போகிறது. இந்த திருட்டு நிகழ்வுகள் குறித்து துணை ஆணையர் காயத்ரி (ஷிரத்தா) விசாரிக்கிறார். அவருக்கு துணையாக சந்துருவும் (விஷால்) வருகிறார்.
காவல்துறையும் இராணுவ அதிகாரியும் சேர்ந்து இந்த திருட்டுகளைச் செய்தவர்கள் யார் எனத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் திருட்டுகளுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை எப்படி சந்துரு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
Remove ads
நடிப்பு
- விஷால் மேஜர் சுபாஷ் சந்திரபோஸ் (சந்துரு)
- சிரத்தா சிறீநாத் காவல் துணை ஆணையர் காயத்தரி ஐபிஎஸ்[4]
- ரெஜினா கசாண்ட்ரா லீலா, ஒரு சதுரங்க பயிற்சியாளர், ஒரு கணினி ஊடுருவல்காரர் மற்றும் முக்கிய எதிரி[5]
- சிருஷ்டி டங்கே -ரித்து பாட்டியா, "டயல் ஃபார் ஹெல்ப்" சிஇஓ
- ரோபோ சங்கர் காவல் ஆ-ய்வாளர் குமார்
- நாசர் ச-ந்துருவின் மறைந்த தந்தையாக
- விஜய் பாபு -காவல் ஆணையர்
- அமித் பார்கவ் -கணேஷ்ஹரி
- மனோபாலா -காயத்திரியின் மாமா
- கே. ஆர். விஜயா -சந்துருவின் பாட்டி
- இரவிகாந்த் -டயல் ஆப் போர்ட் உறுப்பினர்
- பேபி கிருத்திகா -இளம் லீலா (சிறப்புத் தோற்றம்)
- அருள்தாஸ் -லீலாவின் தந்தை (சிறப்புத் தோற்றம்)
- நீலிமா ராணி லீலாவின் தாய் (சிறப்புத் தோற்றம்)
- ரெயில் இரவி -"டயல் ஃபார் ஹெல்ப்" உறுப்பினர்
- பிரதாப் கே. விஜயன் -"டயல் ஃபார் ஹெல்ப்" உறுப்பினர்
- மகா தில்த் கணேஷ்- லீலாவின் சகோததரர்
- அர்ஜுணன்
Remove ads
தயாரிப்பு
இந்த படம் துவக்கத்தில் விஷாலின் முந்தைய அதிரடி பரபரப்பூட்டும், கணிணி கொந்தர் படமான இரும்பு திரையின் தொடர்ச்சி என கூறப்பட்டது. அது 2018 இல் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாகும். இந்தப் படத்திற்கு இரும்புத் திரை 2 என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் திரைப்படத்தின் வகை முந்தையதைப் போலவே இருந்தது.[6] இருப்பினும், படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கராவை நினைவூட்டும் விதமாக படத்திற்கு சக்ரா என்று பெயரிடப்பட்டது.[7] பழம்பெரும் நடிகை கே. ஆர். விஜயா மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் வந்தார். சிரத்தா சிறீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இருவரும் அவர்களின் பாத்திரங்களுக்கான முறையே தற்காப்பு கலை மற்றும் இருசக்கர வாகன சவாரி பயிற்சி பெற்றனர்.
இசை
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
- ஹர்லா பர்லா - யுவன் சங்கர் ராஜா, சஞ்சனா கல்மஞ்சே
- அம்மா - சின்மயி, பிரார்த்தனா
வெளியீடு
இந்தப் படம் முதலில் 2020 மே நாளன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று பொது முடக்கத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.[8] பின்னர் இந்த படம் ஒரே நேரத்தில் 2021 பெப்ரவரி 19 அன்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் சக்ர கா ரக்ஷக் (ஆங்கிலம்: சக்ராவின் பாதுகாப்பாளர்) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
வணிகம்
31.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சக்ரா, திரையரங்குகளில் 21.5 கோடி ரூபாய் வசூலித்தது. 3.5 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்த போதிலும், படம் மிதமான வெற்றியைப் பெற்றதாக கருதப்பட்டது.[3]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads