இராசேந்திர அர்லேகர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

இராசேந்திர அர்லேகர்
Remove ads

இராசேந்திர அர்லேகர் (Rajendra Arlekar) என்பவர் தற்போதைய மற்றும் 23 வது கேரள மாநில ஆளுநராக உள்ளார். இவர் பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் ஆவார். இவர் கோவா அரசாங்கத்தில் அமைச்சராகவும் , கோவா சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.

விரைவான உண்மைகள் இராசேந்திர அர்லேகர், 23வது கேரள ஆளுநர் ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

அர்லேகர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர். 1989ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1980களிலிருந்து கோவா பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்து வருகிறார். பின்வரும் பல்வேறு பதவிகளை பாஜகவில் வகித்துள்ளார்: பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா கட்சி, கோவா பிரதேசம். தலைவர், கோவா தொழில் வளர்ச்சிக் கழகம். தலைவர், கோவா மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகம். பொதுச் செயலாளர், பாரதிய ஜனதா, கோவா. தெற்கு கோவா தலைவர், பாரதிய ஜனதா கட்சி.

2014-ல் மனோகர் பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றபோது, அர்லேகர் அடுத்த முதலமைச்சராகப் பரிசீலிக்கப்பட்டார், ஆனால் அதற்குப் பதிலாக லக்ஷ்மிகாந்த் பர்சேகரை அடுத்த முதலமைச்சராகக் கட்சி தேர்வு செய்தது.

கோவா சட்டப் பேரவையைக் காகிதமில்லாததாக மாற்றிய பெருமைக்குரியவர், அவ்வாறு செய்த முதல் மாநில சட்டமன்றம். பின்னர் 2015-ல் அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

ஆளுநராக

இமாச்சலப்பிரதேச ஆளுநராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா அரியானா ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, அர்லேகர் இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். அர்லேகர் சூலை 13, 2021 முதல் இப்பதவியில் உள்ளார். பாஜக என்பது ஒவ்வொரு உறுப்பினரின் பணியும் அங்கீகரிக்கும் கட்சி என்று அர்லேகர் கூறினார்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads