இராஜீவ் காந்தி தேசிய சமூக நல்லிணக்க விருது
மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பிற்காக வ From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜீவ் காந்தி தேசிய சமூக நல்லிணக்க விருது (Rajiv Gandhi National Communal Harmony Award) அல்லது இராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருது என்பது மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் இந்திய விருது ஆகும். இது இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் நீடித்த பங்களிப்பை நினைவுகூரும் வகையில், இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்தியக் காங்கிரஸ் குழுவினால் 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பத்து லட்சம் ரூபாய் விருது தொகையாக வழங்கப்படும் இந்த விருது இராஜீவ்காந்தியின் பிறந்த நாளான ஆகத்து 20 அன்று சத்பவ்னா திவாஸ் (நல்லிணக்க நாள்) கொண்டாடத்தின் போது வழங்கப்படுகிறது.[1][2]
Remove ads
விருதாளர்கள்
அன்னை தெரசா, செனாய் மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான், வங்களாதேசத்தின் கிராமீன் வங்கி நிறுவனர் முகம்மது யூனுஸ், அசாம் முன்னாள் முதல்வர் இட்டேஸ்வர் சைகியா மற்றும் விடுதலைப் போராட்ட வீராங்கனை சுபத்ரா ஜோஷி, லதா மங்கேஷ்கர், சுனில் தத், ஜெகன்நாத் கவுல், திலீப் குமார் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். எழுத்தாளர் கபில வாத்ஸ்யாயன், வஹியுதீன் கான் (இஸ்லாமிய அறிஞர்), கிரண் சேத் விருது பெற்றவர்களாவர். சமூக ஆர்வலர்களான தீசுடா செதால்வத் மற்றும் ஹர்ஷ் மந்தேர், எஸ். என்.சுப்பாராவ், சுவாமி அக்னிவேஷ் மற்றும் மதரி மொய்தீன், முன்னாள் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், நிர்மலா தேஷ்பாண்டே, ஹேம் தத்தா, என். ராதாகிருஷ்ணன் மற்றும் கௌதம் பாய் முதலானோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.[1][3]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads