இராஜீவ் காந்தி
இந்தியாவின் ஆறாவது பிரதம மந்திரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.[1]

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.[3]
Remove ads
சமய நல்லிணக்க நாள்
இராசீவ் காந்தி பிறந்த நாளான ஆகத்து, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads