இராட்சதலம் ஏரி

From Wikipedia, the free encyclopedia

இராட்சதலம் ஏரிmap
Remove ads

இராட்சதலம் ஏரி (Lake Rakshastal) என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியில், இமயமலைத் தொடரில், கயிலை மலைக்கு தெற்கே, மானசரோவர் ஏரிக்கு மேற்கே அமைந்துள்ள உவர் நீர் ஏரி ஆகும்.[1] சத்லஜ் ஆறு இராட்சதலம ஏரியின் வடமேற்கு முனையில் உற்பத்தியாகிறது. மானசரோவர் ஏரியிலிருந்து மேற்கே 3.7 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த ஏரியை புனித தீர்த்தமாக கருதுவதில்லை. எனவே கயிலை மலைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் இராட்சதலம் ஏரியில் தீர்த்தமாடுவதில்லை.

விரைவான உண்மைகள் இராட்சதலம் ஏரி, அமைவிடம் ...
Remove ads

பெயர்க்காரணம்

Thumb
இராட்சதலம் ஏரியிலிருந்து கயிலை மலையின் தெற்கு முகம்

இந்து சமயச் சாத்திரங்கள் இந்த ஏரியை இராட்சதர்களின் ஏரி என்பதால், இதனை இராட்சத ஏரி என அழைக்கப்படுகிறது. மேலும் இராவணின் இந்த ஏரிப் பகுதியில், சிவபெருமானை நோக்கி இராவணன் தவம் செய்ததாக அறியப்படுகிறது.[2]

பௌத்த சமயத்தில், மானசரோவர் ஏரி வட்டமாக சூரிய வடிவத்திலும், இராட்சதலம் ஏரி பிறை வடிவத்திலும் குறிப்பிடுவதால், அவைகள் முறையே ஒளி மிக்கது என்றும் இருள்படர்ந்தது எனக் குறிப்பிடுகிறது.

Remove ads

புவியியல்

250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இராட்சதலம் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 4,575 மீட்டர் உயரத்தில் இமயமலையின் திபெத்தில் உள்ளது. இந்த ஏரி சிவப்பு மற்றும் அடர் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது.

இராட்சதலம் ஏரியில் இரண்டு பெரிய தீவுகளும், இரண்டு சிறிய தீவுகள் என நான்கு தீவுகள் கொண்டது.[3] குளிர்காலத்தில் இத்தீவுகள் யாக் போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ளது.

இராட்சதலம் ஏரியின் நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாகும். எனவே இராட்சதலம் ஏரியில் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதில்லை.

Remove ads

தட்பவெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், இராட்சதலம் ஏரி, மாதம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads