இராதாகிருஷ்ண மாத்தூர்

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, லடாக் துணைநிலை ஆளுநர் From Wikipedia, the free encyclopedia

இராதாகிருஷ்ண மாத்தூர்
Remove ads

இராதாகிருஷ்ண மாத்தூர் (Radha Krishna Mathur) (பிறப்பு: 25 நவம்பர் 1953), ஓய்வு பெற்ற 1977-ஆம் ஆண்டுத் தொகுப்பு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் துணை நிலை ஆளுநரும் ஆவார்.

விரைவான உண்மைகள் இராதாகிருஷ்ண மாத்தூர், லடாக்கின் துணைநிலை ஆளுநர் ...

இவர் இந்தியத் தலைமை தகவல் ஆணையாராக நவம்பர் 2018-இல் பணி ஓய்வு பெற்றவர்.[1][2][3][4]

முன்னர் இவர் இந்தியப் பாதுகாப்புத் துறையின் உற்பத்தி பிரிவின் செயலாளராகவும், இந்தியத் தொழில் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலாளராகவும், திரிபுரா மாநில தலைமைச் செயலராகவும், பணியாற்றியவர்.[5][5][6][6]

Remove ads

கல்வி

ஆர். கே. மாத்தூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் மற்றும் தில்லி தொழில்நுட்பக் கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை இயந்திரவியல் பட்டம் பெற்றவர்.[5][5][6][6] இவர் பன்னாட்டு தொழிமுனைவோர் மேம்பாட்டு மையத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டம் பெற்றார்.[6]

லடாக் ஒன்றிய துணைநிலை ஆளுநராக

6 ஆகஸ்டு 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய லடாக் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[7][8]

இந்தியக் குடியரசுத் தலைவர் 25 அக்டோபர் 2019 அன்று இராதாகிருஷ்ண மாத்தூரை, 31 அக்டோபர் 2019-இல் புதிதாக நிறுவப்பட்ட லடாக் ஒன்றியப் பகுதியின் லடாக்கின் துணைநிலை ஆளுநாக நியமித்தார். இராதகிருஷ்ண மாத்தூர் 31 அக்டோபர் 2019 (நள்ளிரவு) அன்று லடாக்கின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார்.[9]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads