சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)

இந்திய ஒன்றியப் பகுதி From Wikipedia, the free encyclopedia

சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
Remove ads

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி (Jammu and Kashmir Union Territory) இந்திய நாடாளுமன்றம் 5 ஆகத்து 2019 அன்று இயற்றிய சம்மு காசுமீர் சீரமைப்புச் சட்டத்தின்படி, சம்மு காசுமீர் மாநிலத்தை சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்விரு ஒன்றியப் பகுதிகளின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீசு சந்திர முர்மு பதவி ஏற்றது முதல் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[11][12][13][14][15]

விரைவான உண்மைகள் சம்மு காசுமீர், நாடு ...

சம்மு காசுமீர் அரசின் அலுவல் மொழிகளாக காசுமீரி, உருது, இந்தி, தோக்கிரி மற்றும் ஆங்கிலம் ஆகியவைகள் இருக்கும் என 1 செப்டம்பர் 2020 அன்று இந்திய அரசு அறிவித்துள்ளது.[16][17]

Remove ads

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளின் துவக்கம்

Thumb
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பின்னர் 31 அக்டோபர் 2019-இல் துவக்கப்பட்ட புதிய ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளின் வரைபடம்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான 31 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவைகள் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக செயல்படும் என இந்திய அரசு அறிவித்தது.[18][19]

எல்லைகள்

இதன் வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு நிலங்கள், கிழக்கில் லடாக், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், மேற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் எல்லைகளாக உள்ளது. புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் புதிய வரைபடத்தை 2 நவம்பர் 2019 அன்று இந்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் பாக்கித்தான் ஆக்கிரமிப்பு பகுதிகள் காட்டப்பட்டுள்ளது.[20][21] இந்தியாவின் புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.[22]

Remove ads

பரப்பளவு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதிகளின் 78,114 சதுர கிலோ மீட்டர் தவிர்த்த ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் பரப்பளவு 42,241 சகிமீ ஆகும்.

வரலாறு

இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏயும் நீக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் ஒன்றியப் பிரதேசமாக நிறுவ வகை செய்யப்பட்டது.[23][24][25][26] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் கிரீஷ் சந்திர முர்மு பதவி ஏற்றது முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[12]

அரசாங்கம் மற்றும் அரசியல்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239ஏ-இன் கீழ் ஜம்மு காஷ்மீர் பிரதேசம், இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது.[27] 25 அக்டோபர் 2019 அன்று ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார்.[28][29][30]

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் சட்டமன்றம் 107 முதல் 114 உறுப்பினர்கள் இருப்பர். சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை துணைநிலை ஆளுநரே நியமிப்பார். சட்டமன்ற நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு அமைச்சரவைக் குழு ஆலோசனைகள் வழங்குவர். மற்ற விசயங்களில் துணைநிலை ஆளுநரே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.[27] சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவ்வொன்றியப் பகுதியின் பொது அமைதி தொடர்பான சட்டங்கள் மற்றும் காவல் துறை ஆகியவைகளை இந்திய அரசே வழிநடத்துகிறது.[27]

Remove ads

நீதி நிர்வாகம்

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிக்கும் சேர்த்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் செயல்படும்.

காவல் துறை

இவ்வொன்றியப் பகுதிக்கான புது காவல் துறை உருவாக்கப்படும் வரை, ஏற்கனவே உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையே ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கும், லடாக் ஒன்றியப் பகுதிக்கும் பணியாற்றும்.[31]

மாவட்டங்கள்

Thumb
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் மாவட்டங்கள்

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் ஜம்மு வருவாய் கோட்டத்தில் 10 மாவட்டங்களும், ஸ்ரீநகர் வருவாய் கோட்டத்தில் 10 மாவட்டங்களும் கொண்டுள்ளது.[32][33]

ஜம்மு வருவாய் கோட்டத்தின் மாவட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் குறியிடு, மாவட்டம் ...

ஸ்ரீநகர் வருவாய் கோட்டத்தின் மாவட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் குறியிடு, மாவட்டம் ...

இதனுடன் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள, ஜம்மு காஷ்மீரின் பகுதிகளான ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் வருவாய் கோட்டம், முசாஃபராபாத் வருவாய் கோட்டம் மற்றும் மிர்பூர் வருவாய் கோட்டத்தின் 10 மாவட்டங்கள் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் வரைபடத்தில் இந்திய அரசு இணைத்துக் காட்டியுள்ளது.[21]

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

  1. Jammu and Kashmir is a எல்லைத் தகராறு between இந்தியா and பாக்கித்தான். Jammu and Kashmir has 42,241 km2 of area administered by India and 13,297 km2 of area controlled by Pakistan under Azad Kashmir which is claimed by India as part of Jammu and Kashmir.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads