இரான்ட்சுடாடு

From Wikipedia, the free encyclopedia

இரான்ட்சுடாடு
Remove ads

இரான்ட்சுடாடு (Randstad, டச்சு ஒலிப்பு: [ˈrɑntstɑt]) மேற்கு நெதர்லாந்திலுள்ள பெருநகரத் தொகுப்பாகும். இது நெதர்லாந்தின் மாகாணங்களான வடக்கு ஆலந்து, தெற்கு ஆலந்து, உத்ரெக்ட் மற்றும் பிளெவோலாந்துப் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பெரிய நகரங்களான ஆம்ஸ்டர்டம், ஆர்லெம், லைடன், டென் ஹாக், டெல்ஃப்ட், ராட்டர்டேம், டோர்ட்ரெக்ட், கௌடா, உத்ரெக்ட், இல்வெர்சம், அல்மெரெ ஆகியன அடங்கியுள்ளன. இச்சொற்றொடரை முதன்முதலாக கேஎல்எம் வானூர்தி சேவை நிறுவனரான ஆல்பெர்ட் பிளெசுமான் பயன்படுத்தினார். வானிலிருந்து காண்கையில் இந்த நகரங்கள் ஒரு வட்டத்தில் அமைந்திருப்பதாகத் தோன்றியமையால் எல்லை நகரம் எனப் பொருள்படும்படி இராண்ட்சுடாடு எனப் பெயரிட்டார். இரான்ட்சுடாடு நெதர்லாந்தின் 20% பரப்பில் அமைந்துள்ளது. நெதர்லாந்தின் மக்கள்தொகையில் 40%க்கும் கூடுதலானவர்கள் இங்கு வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள நகரங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுடன் 26 கிலோமீட்டர்கள் (16 mi) (டென் ஹாக் - ராட்டர்டேம்) முதல் 77 கிலோமீட்டர்கள் (48 mi) (ஆம்ஸ்டர்டேம் - ராட்டர்டேம்) வரையிலான தொலைவுகளில் உள்ளன. வட்டத்தின் மையமான பகுதி கிரோன் ஆர்ட் எனப்படுகின்றது; இங்கு வெகு சிலரே வாழ்கின்றனர்.

விரைவான உண்மைகள் இரான்ட்சுடாடு இரான்ட்சுடாடு ரெஜியோ, நாடு ...
ThumbGouda
இரான்ட்சுடாடின் விவரிப்புப் படம்
Thumb
இரான்ட்சுடாடில் அடங்கியுள்ள பெருநகரங்கள், நகரங்களின் மக்கள்தொகையை காட்டும் குமிழ் நிலப்படம்; குமிழின் அளவு மக்கள்தொகைக்கேற்ப உள்ளது.

7,100,000 மக்கள்தொகை கொண்ட இரான்ட்சுடாடு ஐரோப்பாவின் மிகப் பெரும் பெருநகரத் தொகுப்பாக விளங்குகின்றது;[b] அளவில் மிலன் பெருநகரப் பகுதியையும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியையும் ஒத்துள்ளது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 8,287 கி.மீ.² ஆகும்.[a]

இப்பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரும் கடற் துறைமுகமான ராட்டர்டேமும் மிகப் பெரும் வானூர்தி நிலையமான ஸ்கைபோலும் உள்ளன.

Remove ads

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads