இராமகுப்தர்

From Wikipedia, the free encyclopedia

இராமகுப்தர்
Remove ads

இராமகுப்தர் (ஆட்சிக்காலம்:380), சமுத்திரகுப்தரின் மூத்த மகனும், இரண்டாம் சந்திரகுப்தரின் அண்ணனும் ஆவார். இவர் மிகச் சில மாதங்களே குப்தப் பேரரசை ஆண்டார். துவக்கத்தில் இவரைப் பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே இருந்தது. விதிஷா அருகில் உள்ள துர்ஜன்பூர் கல்வெட்டுகளில் இராமகுப்தரை மகாராசாதிராசா எனக் குறிப்பிட்டுள்ளது. ஏரண்-விதிஷா பகுதிகளில், இராமகுப்தர் வெளியிட்ட நாணயங்கள் கிடைக்கப்பெற்றது.[1]

விரைவான உண்மைகள் இராமகுப்தர், 5வது குபதப் பேரரசர் ...
Remove ads

இராமகுப்தர் தொடர்பான மரபுக் கதைகள்

சகர்களின் மேற்கு இந்தியப் பகுதியின் குஜராத்தை ஆண்ட மேற்கு சத்ரபதி மன்னர் மூன்றாம் ருத்திரசிம்மன் மீது இராமகுப்தர் படையெடுத்து சென்ற போது, இராமகுப்தர் உள்ளிட்ட அவரது படைகள் ருத்திரசிம்மனிடம் சிக்கின. சிக்கிய இராமகுப்தரையும், படையினரையும் விடுவிக்க, இராமகுப்தரின் மனைவி துருஸ்வமினியை மூன்றாம் ருத்திரசிம்மனிடம் ஈடாக வைத்து, தன்னையும், தன் படைகளையும் இராமகுப்தர் மீட்டார். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர், மூன்றாம் ருத்திரசிம்மன் மீது படையெடுத்து வென்று, இராமகுப்தரின் மனைவி துருஸ்வமினியை மீட்டு வந்தார் என வாய்வழிக் கதைகள் நிலவுகிறது.

Remove ads

அடிக்குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads