சமுத்திரகுப்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தர், இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் இந்து சமயம், கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர், சமுத்திர குப்தருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.
ஜாவா தீவின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.[1] சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு கடல் என்று பொருள். சமுத்திரகுப்தரை அசோகருக்கு நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையைப் போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.[2]
முதலாம் சந்திர குப்தருக்கும் - மகாஜனபாதங்களில் ஒன்றான லிச்சாவி இளவரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். பாடலி புத்திரத்தை தலைநகராகக் கொண்ட குப்தப் பேரரசை நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.
Remove ads
வெற்றிகள்
ரோகில்கண்ட் மற்றும் மத்திய இந்தியாவின் பத்மாவதி ஆகிய பகுதிகளை சமுத்திரகுப்தர் வென்ற பின்னர் தற்கால வங்காளம், ஒடிசா, மால்வா, குஜராத், நேபாளம், வங்காளம், ஒரிசா, அசாம், மதுரா, மத்தியப் பிரதேசம், காஷ்மீர், ஆப்கானித்தான் வென்று, பின் தென்னிந்தியாவின் ஆந்திரம் வரை வெற்றி கொண்டார். முழு வட இந்தியாவை, குப்தப் பேரரசில் கொண்டுவந்தவர் சமுத்திரகுப்தர் ஆவார்.[3] பல்லவ மன்னர் முதலாம் விட்ணுகோபன், சமுத்திரகுப்தரின் தமிழகம் மீதான வெற்றியை தடுத்தார்.
Remove ads
அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்

சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை அலகாபாத் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.[4] கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.[5] சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
Remove ads
பின் வந்த ஆட்சியாளர்
சமுத்திரகுப்தர் நாற்பது ஆண்டுகள் குப்தப் பேரரசை ஆட்சி செய்த பின்னர், அவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர் பட்டத்திற்கு வந்தார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads