இராமசாமி பரமேஸ்வரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து, 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2]
Remove ads
மரபுரிமைப் பேறுகள

- 1998-இல் சென்னை ஆற்காடு சாலையில் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டப்பட்ட குடியிருப்பு காலனிக்கு மேஜர் பரமேஸ்வரின் நினைவாக மேஜர் பரமேஸ்வரன் விகார் எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது.
- சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள சிறீநகர் காலனியில் இயங்கும் முன்னாள் இராணுவத்தினர் நலச்சங்க கட்டிடத்திற்கு மேஜர் பரமேஸ்வரன் மாளிகை எனப்பெயரிட்டு மரியாதை செய்யப்பட்டது.
- புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் வளாகத்தில் பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்களுக்கான வரிசையில் மேஜர் பரமேஸ்வரனின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இதுவரை பெயரிடப்படாத தீவுகளுக்கு இந்திய அரசு சனவரி 2023ல் மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் உள்ளிட்ட பரம் வீர் சக்கர விருது பெற்ற 21 வீரத்தியாகிகளின் பெயர்கள் சூட்டி கௌரவப்படுத்தியது.[3][4]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads