இராமாநந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரயாக்ராஜ் நகரத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த இராமாநந்தர், இளைஞனாக இருக்கையில் வீட்டை விட்டு வெளியேறி, துறவு வாழ்க்கை மேற்கொண்டு, வேத நூல்கள், இராமானுஜரின் விசிட்டாத்துவைதம் மற்றும் யோக நுட்பங்களைப் படிப்பதற்காக வாரணாசிக்குச் சென்றார். படிப்பை முடித்த இராமானந்தர் கற்பிக்கத் தொடங்கினார். அவர் தனது மாணவர்களுடன் சாதி வேறுபாடுகள் பொருட்படுத்தாமல் சேர்ந்து உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடித்தார். எனவே இவர் இராமானந்த சம்பிரதாயத்தை நிறுவினார். இச்சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களை இராமானந்திகள் என்று அழைப்பர்.[3]
இராமானந்தரின் போதனைகள் இராமானுஜரின் போதனைகளைப் போலவே இருந்தன. சாதாரண மக்களும் சாஸ்திர அறிவை பெற வேண்டும் எனும் நோக்கில் சமசுகிருத மொழியில் கூறாது, இந்தி மொழியில் கற்பித்தார். இவரது நேரடி 12 சீடர்களில் ஒரு பெண், செருப்பு தைக்கும் தொழிலாளியான ரவிதாசர் மற்றும் இசுலாமியரான கபீர், முடிதிருத்துபவரான பகத் சைன் அடங்குவர்.
இராமானந்தரது முயற்சியால் வட இந்தியாவில் வைணவம் பரவியது. இவர் இராமர் சீதை வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads