இராமேசுவர் தாக்கூர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

இராமேசுவர் தாக்கூர்
Remove ads

இராமேசுவர் தாக்கூர் (Rameshwar Thakur) (ஜூலை 28 1925 - 15 ஜனவரி 2015) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் ஆவார். இவர் மத்திய பிரதேச ஆளுநராக 2009 முதல் 2011 வரையிலும், ஒடிசா ஆளுநராக 2004 முதல் 2006 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2006 முதல் 2007 வரையிலும், கர்நாடகா ஆளுநராக 2007 முதல் 2009 வரையிலும் இருந்தார். பட்டய கணக்கறிஞரான, இவர் 1966 முதல் 1967 வரை இந்தியாவின் பட்டய கணக்கறிஞர்கள் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

விரைவான உண்மைகள் இராமேசுவர் தாக்கூர், 15வது மத்திய பிரதேச ஆளுநர் ...
Remove ads

சுயசரிதை

தாக்கூர் சார்க்கண்டின் கோடா மாவட்டத்திலுள்ள தாக்கூர் காந்தி கிராமத்தில் பிறந்தார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். நவம்பர் 1998 முதல் நவம்பர் 2001 வரை இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். மீண்டும் நவம்பர் 2004 க்குப் பிறகு. தாக்கூர் ஆகஸ்ட் 21, 2007 அன்று கர்நாடகத்தின் 15வது ஆளுநராக பொறுப்பேற்றார். [1]

ஜூன் 24, 2009 அன்று இவர் மத்திய பிரதேச ஆளுநராக மாற்றப்பட்டார். [2] இவர் 15 ஜனவரி 2015 அன்று தில்லியில் இறந்தார். [3]

இவர் நர்மதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads