இராயப்பேட்டை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

இராயப்பேட்டைmap
Remove ads

இராயப்பேட்டை (ஆங்கிலம்: Royapettah) சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறப் பகுதியாகும். மெரினா கடற்கரைக்கு மேற்கே அமையப்பெற்றுள்ளது. சென்னை நகரின் மிகப்பெரிய அரசுப் புறநகர் மருத்துவமனையான இராயப்பேட்டை அரசு மருத்துவமனை இங்குதான் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகம், புதுக்கல்லூரி, ஈ.ஏ. வணிக வளாகம், இராணிமேரி கல்லூரி போன்றவை இங்கு குறிப்பிடத்தக்கவை.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

Thumb
இராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகம்

ஆங்கிலேயர்கள் 1721-ம் ஆண்டு தங்கள் பதிவுகளில் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களை உள்ளடக்கிய "பெரும் சத்திர வெளி" என்று குறித்திருந்த பகுதிகளில் ஒன்றாக இராயப்பேட்டை இருந்தது.[1] ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் இராயப்பேட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் யூரேசிய மக்கள் பெருவாரியாகக் குடியேறத் தொடங்கினர்.[2] 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இராயபேட்டையின் சுற்றுப்புறங்களில் இஸ்லாமிய சமூகம் குடியேரத் துவங்கியது.[3] 1798-ம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அதன் நிர்வாக அலுவலகங்களை அமைப்பதற்காக அமீர் மஹாலைக் கட்டியது.[4] அந்நிறுவனம் அவகாசியிலிக் கொள்கையின் படி 1855-ல் கர்நாடக அரசை இணைத்துக் கொண்டபின் ​​நவாப்களின் அதிகாரப்பூர்வ இல்லமான சேப்பாக்கம் அரண்மனை ஏலம் விடப்பட்டு சென்னை அரசால் வாங்கப்பட்டது.[4] இதன் பின்னர் நவாப் குடும்பத்தினர் திருவல்லிக்கேணி செடுஞ்சாலையிலுள்ள ஷாதி மஹால் என்ற கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்து அங்கு வசிக்கத் துவங்கியது.[4] ஆங்கிலேயர்கள் அமீர் மஹாலை ஆற்காடு இளவரசருக்கு வழங்க, அதுவரை அலுவலகக் கட்டடமாக இருந்த அது ராபர்ட் சிசோம் என்பவரால் அரண்மனையாக மாற்றப்பட்டது.[5] 1876-ல் நவாப் தனது குடும்பத்துடன் அமீர் மஹாலுக்குக் குடிபெயர்ந்தார்.[4] அதிலிருந்து அக்கட்டடம் ஆற்காடு நவாப்களின் வசிப்பிடமாக மாறியது.[4]

இராயபேட்டையின் முதல் தேவாலயமான சுத்திகரிப்பு தேவாலயம் 1769-ம் ஆண்டில் கட்டப்பட்டது.[6] எனினும் 1848-ம் ஆண்டில் அது இடிக்கப்பட்டு அவ்விடத்தில் வாலாஜாபேட்டை தேவாலயம் என்றழைக்கப்படும் பிரசன்டேஷன் தேவாலயம் கட்டப்பட்டது.[6] இந்த தேவாலயம் 1813-ல் நவாப்பால் வழங்கப்பட்ட 21-கிரவுண்டு நிலத்தில் கட்டப்பட்டது.[6] தேவாலயத்தை ஒட்டி அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் 1889-ம் ஆண்டு தற்போது ஜாம் பஜார் என்று அழைக்கப்படும் பகுதியில் கட்டப்பட்டது.[6] 1810-இல் ஆயிரம் விளக்கு மசூதி கட்டப்பட்டது.[7] 1819-ம் ஆண்டு இந்தியாவின் முதல் மெதடிஸ்ட் தேவாலயம் ராயப்பேட்டையில் மெதடிஸ்ட் மதபோதகரான ஜேம்ஸ் லிஞ்ச் என்பவரால் திறக்கப்பட்டது.[8] இத்தேவாலயம் வளர்ந்து வெஸ்லி தேவாலயமாக 1853-ல் வழங்கப்பட்டது.[8]

1819-ம் ஆண்டு ஆசியாவின் மிகப் பழமையான சிறப்பு கண் மருத்துவமனையாகவும், உலகின் இரண்டாவது பழமையான கண் மருத்துவமனையாகவும் திகழும் மெட்ராஸ் கண் மருத்துவமனை இராயப்பேட்டையில் நிறுவப்பட்டது.[9][10] லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இம்மருத்துவமனை 1884-ல் எழும்பூருக்கு மாற்றப்பட்டு பின்னர் 1886-ல் அரசுக் கண் மருத்துவமனையாக மாறியது.[9] அரசு ராயப்பேட்டை மருத்துவமனை 1911-ல் திறக்கப்பட்டது.[11]

1858-ல் பழமையான புராட்டஸ்டன்ட் பள்ளிகளில் ஒன்றான மோனஹன் பெண்கள் பள்ளி இராயப்பேட்டையில் திறக்கப்பட்டது.[8] 1928-ம் ஆண்டில் உடற்கல்விக்கான ஆரம்ப பள்ளிகளில் ஒன்று இராயப்பேட்டையின் வெஸ்லி பள்ளியில் துவங்கப்பட்டது.[12] ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தின் துணை அஞ்சலகமாக இராயப்பேட்டை தபால் நிலையம் 1834-ல் துவக்கப்பட்டது.[13] 1938-ல் உட்லண்ட்ஸ் உணவகமும் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் மாடர்ன் ஹிந்து உணவகமும் திறக்கப்பட்டதன் மூலம் இராயப்பேட்டையானது சென்னையின் முதல் இந்தியப்-பாணி சைவ உணவகங்களின் தாயகமாக மாறியது.[14]

1939-களில் இராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் எஸ்.பி.அய்யாசாமி முதலியார் அவர்களின் காந்தி பீக் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இரண்டு முறை தமிழகம் வந்த போது தங்கி உள்ளார். இந்திய குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் ராஜாஜி ஆகியோரின் தலைமையில் பல்வேறு காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டங்கள் இவரின் காந்தி பீக் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராஜேந்திரப் பிரசாத், முன்னாள் முதல்வர் ராஜாஜி அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இவரது காந்தி பீக் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

1930-களில், இராயப்பேட்டையில் ஒரு கடிகாரக் கோபுரம் கட்டப்பட்டது. முன்னதாகத் "தென்னிந்திய கடிகார நிறுவனம்" என அறியப்பட்ட கனி அண்ட் சன்ஸ் குழுமத்தினர் இக்கடிகாரக் கோபுரத்திற்கு கடிகாரக் கருவியை வழங்கினர்.[15]

Remove ads

மேற்கோள்கள்

மேற்கோள் தரவுகள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads