இரா. தண்டாயுதம்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. தண்டாயுதம் (R. Dhandayudham) ( 1939 - ? ) ஒரு தமிழ் எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1][2]
வாழ்க்கைக் குறிப்பு
தண்டாயுதம் மலேசியாவிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். அவர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விமர்சன மற்றும் ஆய்வுப் படைப்புகள் பல வெளியிட்டார். அவர் சில புனைவுகளும் எழுதியுள்ளார். அவரது விமர்சனப் படைப்புகள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பாடத்திட்டமாக்கப் பட்டுள்ளன. தற்காலத் தமிழ் இலக்கியம் என்ற அவரது இலக்கிய விமர்சனம் 1975ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. மலேசியாவில் அவரது நினைவாக டாக்டர் தண்டாயுதம் இலக்கியப் பேரவை என்ற இலக்கிய அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.[3]
Remove ads
எழுதிய நூல்கள்
(முழுமையானதல்ல)
அபுனைவு
- தற்கால தமிழ் இலக்கியம்
- மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு
- எ ஸ்டடி ஆஃப் சோஷியாலஜிக்கல் நாவல்ஸ் இன் தமிழ்
- ஆலய வழிபாட்டில் தமிழ்
- எ சர்வே ஆஃப் மாடர்ன் தமிழ் லிட்ரேச்சர்
புனைவு
- மலரும் மலர்
- பொய்யான நியாயங்கள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads