இர்க்கொன் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இர்க்கொன் பன்னாட்டு நிறுவனம் (Ircon International Limited, IRCON) போக்குவரத்து உட்கட்டமைப்பில் குவியம் கொண்டுள்ள பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகும். இது 1976இல் 1956 இந்திய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இர்க்கொன் இந்திய இரயில்வே அமைச்சகத்திற்கு முழுமையும் சொந்தமானதாக இந்திய இரயில்வே கட்டுமான நிறுவனம், (Indian Railway Construction Company Limited) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், துவக்கத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருப்புப்பாதை கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதாக இருந்தது. பின்னதாக மற்ற போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணிகளிலும் தனது பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. தனது விரிவுபடுத்தப்பட்ட குறிக்கோளுக்கிணங்க, நிறுவனத்தின் பெயரை இர்க்கொன் பன்னாட்டு நிறுவனம் என அக்டோபர் 1995இல் மாற்றிக் கொண்டது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கடினமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு தனது பெயரை நிலைநாட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 300 முதன்மை கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது; 21 வெளிநாடுகளில் 121 முதன்மை திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.[2]
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.
Remove ads
இயங்கும் வெளிநாடுகள்
இதனையும் காண்க
- பொதுத்துறை நிறுவனம்
- பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்
- இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads